கிராமங்களுக்கு 2 பிஒஎஸ் இயந்திரங்கள் வழங்கப்படும் என்று மத்திய நிதி  மந்திரி அருண்ஜெட்லி கூறிஉள்ளார்.
பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்ததைதொடர்ந்து மத்திய அரசு ரொக்கமில்லாமல், மின்னணு முறையிலான பணம்செலுத்தும் முறையை ஊக்கப்படுத்தும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டுவருகிறது.
 
அதற்கு முதல்கட்டமாக "பாயிண்ட் ஆஃப்சேல்' எனப்படும் "கார்டு ஸ்வைப்பிங்' இயந்திரங்கள் அதற்கான உதிரிப் பாகங்களுக்கு விதிக்கப் பட்டு வந்த 12.5 சதவீத உற்பத்தி வரி, 4 சதவீத சிறப்பு கூடுதல்வரி ஆகியவற்றை மத்திய அரசு ரத்து செய்தது. கடைகள், வணிக நிறுவனங்களில் டெபிட் கிரெட் கார்டுகளில் இருந்து இந்த வகை "கார்டு ஸ்வைப்பிங்' இயந்திரங்கள் மூலம்தான் ரொக்கமற்ற பணப்பரிவர்த்தனை நடைபெறுகிறது. இப்போது, ரொக்கமற்ற பணப் பரிவர்த்தனையை பயன்படுத்த வேண்டும் என்று அரசு வலியுறுத்தி வரும் நிலையில்,
 
அதனை ஊக்கப்படுத்தும் நோக்கில் அதற்கான கருவிகளுக்கு வரிரத்து செய்யப்பட்டது. மக்களவையில் ஏற்கனவே இதுதொடர்பான அறிவிப்பை அருண் ஜெட்லி வெளியிடுகையில், “கார்டுஸ்வைப்பிங்” இயந்திரங்களுக்கான 12.5 சதவீத உற்பத்தி வரி, 4 சதவீத சிறப்பு கூடுதல் வரி ஆகியவை வரும் 2017-ஆம் ஆண்டு மார்ச் 31-ஆம் தேதிவரை ரத்து செய்யப்படுகிறது,” என்றார். 
 
 
ரூபாய் நோட்டு ஒழிப்பை அடுத்து மின்னணு முறையிலான பணம்செலுத்தும் முறையை ஊக்கப்படுத்தும் விதமாக மத்திய மந்திரி அருண்ஜெட்லி முக்கிய அறிவிப்பினை வெளியிட்டார். 
 
அதில் பிஒஎஸ் இயந்திரத்தை கிராமங்களுக்கு கொண்டுசெல்லும் அறிவிப்பும் இடம்பெற்று இருந்தது. ரிசர்வ்வங்கி திட்டமிட்டபடி புதிய கரன்சிநோட்டுகளை வெளியிட்டுவருகிறது. மின்னணு பணப்பரிமாற்றமே பண மதிப்பிழப்பு அறிவிப்பின் இழக்காகும். பணப் பரிமாற்றம் அரசுக்கு செலவை கூட்டுவதால் மின்னணு பரிமாற்றமே இலக்கு என்ற மத்தியமந்திரி அருண் ஜெட்லி பேசுகையில், “10,000 மக்கள் தொகை கொண்ட கிராமங்களுக்கு 2 பிஒஎஸ் இயந்திரங்கள் வழங்கப்படும், இதற்காக ஒரு லட்சம் கிராமங்கள் தேர்வு செய்யப்படும்,” என்றார்.

Leave a Reply