அரியும் சிவனும் ஒன்றே!!! 

அறிந்தால் வாழ்வும் நன்றே..

 

தங்கம் ஒன்று ரூபன் வேறு தன்மையான வாறு போல் 

செங்கன் மாலும் ஈசனும் சிறந்திருந்ததும்முளே 

விங்களங்கள் பேசுவோர் விளங்குகின்ற மாந்தரே 

எங்குமாகி நின்ற நாமம் இந்த நாமமே.  வாசலில் கால் பதித்து கண்ணா வா வா என்று அம்மா கூப்பிடும் நவரச பண்டிகை…!!! 

கிருஷ்ணனும்,குழந்தையும் விளையாடினால் அன்று முழுவதும் கோலகல பண்டிகை,,,!!!கோகுலாஷ்டமி என்றும் சொல்லுவார்கள்….

கிருஷ்ண ஜெயந்தியன்று தன்னை அழைக்கும் பக்தர்களின் வீட்டிற்கு கண்ணன் வருவார் என்பது பக்தர்களின் நம்பிக்கை, எனவே கிருஷ்ண ஜெயந்தியன்று, வீட்டைச் சுத்தப்படுத்தி, அலங்கரித்து, குழந்தை கண்ணனை வர வேற்கும் விதத்தில், வீட்டு வாசலில் இருந்து பூஜை அறை வரையில், சின்னக்கண்ணன் நடந்து வருவது போல், அவனது பாதச்சுவடுகளை ஸ்ரீ கிருஷ்ணபாதம் கூறிக்கொண்டே மாக்கோலமிட்டு வரவேற்கலாம். இதனால், கண்ணனே நேரில் நம் வீட்டுக்கு எழுந்தருள்வதாக ஐதீகம். ஆயர்பாடியில் கண்ணனை வரவேற்க சித்திரகோலம் (ரங்கோலி), மலர் அலங்காரம், பூக்கோலம் இடுவர். அதை நமது இல்லங்களிலும் செய்து கிருஷ்ணரை வரவேற்க வேண்டும். இதனால் கண்ணனே தன் திருப்பாதங்களைப் பதித்து நடந்து வந்து, பூஜை அறையில் நாம் வைத்துள்ள நைவேத்திய பட்சணங்களை ஏற்றுக்கொள்கிறார் என்பதாகும்

 

பலன்: கிருஷ்ண ஜெயந்தியன்று பிள்ளை பேறு இல்லாதவர்கள் ஸ்ரீமத் பாகவதத்தில் உள்ள தசம ஸ்காந்தம் படித்து பாராயணம் செய்தால், அழகான ஆண் குழந்தை பிறக்கும் என்னும் நம்பிக்கை இன்றும் உள்ளது. கிருஷ்ண ஜென்ம பூமி<யான மதுரா வாழ் மக்கள், அன்று இரவு முழுவதும் கண் விழித்திருந்து பூஜை செய்வார்கள். யமுனை நதியின் ஒரு கரையில் மதுராவும், மறு கரையில் கோகுலமும் அமைத்துள்ளது. அதனால், அன்று யமுனைக்கு ஆரத்தி காட்டி பூஜை செய்வார்கள்

 

கிருஷ்ணஜெயந்தி வழிபாடல்ல…..! வாழ்வியல்முறை,…! குழந்தைகளை கொண்டாடுங்கள்…குழந்தைகளோடு பேசுங்கள்…! குழந்தைகளுக்காக நேரம் ஒதுக்குங்கள்…! ஏனெனில் குழந்தைகளே நம் சொத்து..அவர்களே நம் எதிர்காலம்…! குழந்தைகளே நம்மை எதிர்காலத்தில் காக்கும் கடவுள்"… இவற்றை நினைவூட்டுவதே கிருஷ்ண ஜெயந்தி…. இது வழிபாடல்ல…வாழ்வியல்முறை!

 

அன்புடன்

முத்துமணிகண்டன்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *