குஜராத் சட்டசபை தேர்தலில் பா.ஜ.க, 97 இடங்களில் வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியமைக்க வாய்ப்புள்ளது என காங்., கட்சி நடத்திய ரகசிய கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது அக்கட்சிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வரும் 2017ம் ஆண்டு குஜராத் சட்ட சபை தேர்தல் நடைபெறவுள்ளது. இத்தேர்தலில் யாருக்கு வெற்றிவாய்ப்பு என தனியார் அமைப்புகள் மூலம்  ரகசிய கருத்துக் கணிப்பு நடத்திய. காங்., துணைத்தலைவர் ராகுலுக்கு கருத்துக்கணிப்பு முடிவை குஜராத் காங்கிரஸ் அனுப்பியுள்ளது. அந்த அறிக்கையில், குஜராத் சட்டசபையில் மொத்தமுள்ள 182 தொகுதிகளில் பா.ஜ.,வுக்கு 52 தொகுதிகளில் 100 சதவீத வெற்றிநிச்சயம் எனவும், 45 தொகுதிகளில் 80 சதவீதம் முதல் 85 சதவீதம்வரை வெற்றிவாய்ப்பு உள்ளது எனவும், 97 தொகுதிகளில் பா.ஜ.,வுக்கு வெற்றிகிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீதமுள்ள 85 தொகுதிகளில் காங்., வெற்றிபெற்றாலும், குஜராத்தில் ஆட்சியமைக்க முடியாது எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளது. மேலும் தேர்தலில் பா.ஜ.,வுக்கு சவால் அளிக்க, காங்., கட்சியினர் தீவிரமாக பணியாற்றவேண்டும் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளது. இவ்வாறு காங்., கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

Leave a Reply