குஜராத்மாநிலத்தில் காங்கிரஸ்வசம் இருந்த தலாலா தொகுதிக்கான இடைத்தேர்தலில் பா.ஜ.க. வெற்றிபெற்றுள்ளது.

குஜராத் மாநிலம் தலாலா சட்டமன்ற தொகுதியின் காங்கிரஸ் எம்எல்ஏ. ஜாசு பரத் கடந்த ஜனவரி மாதம் மரணம் அடைந்ததையடுத்து அந்ததொகுதிக்கு கடந்த 16-ம் தேதி தேர்தல் நடத்தப்பட்டது. இதில் 63 சதவீத வாக்குகள் பதிவாகின.

இந்ததொகுதியில் காங்கிரஸ் சார்பில் ஜாசு பரத்தின் சகோதரர் பகவன்ஜி பரத் போட்டியிட்டார். பாஜக. வேட்பாளராக பார்மர் களமிறங்கினார். இவர் ஏற்கனவே, இதேதொகுதியில் 2002ம் ஆண்டு நடந்ததேர்தலில் வெற்றி பெற்றவர். இவர்கள் இருவருக்குமிடையே நேரடி போட்டி இருந்தது.

இந்நிலையில் தலாலா தொகுதியில் பதிவானவாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில், பா.ஜ.க. வேட்பாளர் பார்மர் 63,896 வாக்குகளும், காங்கிரஸ் வேட்பாளர் பரத் 61,456 வாக்குகளும் பெற்றனர். இதனால் பார்மர் 2440 வாக்குகள் வித்தியாசத்தில் பார்மர் வெற்றிபெற்றார்.

இந்தவெற்றியானது 2017ல் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க. வெற்றிபெறுவதற்கான அறிகுறி என அக்கட்சியின் மாநில தலைவர் ரூபானி தெரிவித்தார். பட்டேல் இடஒதுக்கீட்டு போராட்டக் குழுவில் உள்ள சிலர் பா.ஜ.க.வுக்கு எதிராக பிரச்சாரம் செய்த போதும், பட்டேல் சமூக வாக்காளர்கள் தங்கள்பக்கம் இருந்ததாகவும் அவர் கூறினார்.

Leave a Reply