குஜராத் முதல்வராக இருந்துவந்த ஆனந்தி பென் பட்டேல் தனது பதவியை அண்மையில் ராஜினாமா செய்தார். அதனை தொடர்ந்து பாஜக மாநில தலைவராக இருந்துவந்த விஜய் ரூபானி மாநில முதல்வராக தேர்தெடுக்கப் பட்டார். கடந்த ஞாயிற்றுக் கிழமை இவர் மாநில முதல்வராக பதவியேற்றுக் கொண்டார்.
இந்நிலையில் குஜராத் மாநில பாஜக தலைவராக ஜிட்டுவகானியை தலைவர் அமித்ஷா நியமித்துள்ளார். இவர் படேல் இனத்தைச்சேர்ந்தவர். குஜராத்தில் இடஒதுக்கீடு தொடர்பாக படேல் சமூகத்தினர் போராட்டம் நடத்திவரும் நிலையில் பாஜக தலைவராக ஜிட்டு வகானி நியமனம் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.