பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் மாநில அரசு முறையாக நடவடிக்கை எடுத்துவருவதாக பாஜகட்சியின் தேசிய பொதுசெயலாளர், முரளிதரராவ் தெரிவித்து உள்ளார்.

பாரதிய ஜனதா கட்சியின் தேசிய பொதுசெயலாளர், முரளிதரராவ் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசியவர், தேசிய ஐனநாயக கூட்டணி, இந்தியாவில் மிகப் பெரிய, வலுவான கூட்டணியாக உள்ளது.கூட்டணி தொடர்பாக கேரளாவில் இடது சாரிகளும், காங்கிரசும் சண்டை போட்டுக் கொண்டு இருக்கின்றனர்.

இந்தியாவில் மற்றகூட்டணி கட்சிகளுக்கு தலைவர் இல்லை. இந்திய ஜனநாயக கூட்டணியில் மட்டுமே மோடி தலைவராக உள்ளாா். வருகிற 23, 24 ஆம் தேதிக்கு முன்னர் இந்தியாமுழுவதும் உள்ள பாஜக வேட்பாளர்கள் உறுதி செய்யப்படுவார்கள் என கூறிய அவர், தமிழகம் உட்பட தென்னிந்தியா முழுவதும் வேட்பாளர்களின் பெயர்கள் வருகிற நான்கு, ஐந்து தினங்களில் இறுதிசெய்யப்படும் என தெரிவித்தார்.

மேலும், தமிழகத்தில் பாஜக போட்டியிடும் தொகுதி மட்டுமில்லாது அனைத்து தொகுதிகளிலும் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய, மாநில தலைவர்கள் பிரசாரம்செய்வார்கள். குடும்ப, சாதி அரசியலுக்கு பாஜக எதிரானவர்கள்.

மதுரையில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு தேர்தலை தள்ளிவைக்க கேட்டுகொண்டு உள்ளதாகவும், தேர்தல் ஆணையம்தான் இதற்கு முடிவுசெய்ய வேண்டும் என கூறினார்.

பிரதமராக, மோடிதான் அதிகளவில் தமிழகத்திற்கு வந்துள்ளாா். பொள்ளாச்சி விவகாரத்தில் அரசு இதற்கு அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கவலியுறுத்தி உள்ளோம்.

அதிமுகவினர் இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுத்து கொண்டு இருப்பதாகவும், தொடர்ந்து நடவடிக்கை எடுப்பார்கள் என கூறினார். பாஜக அமைத்துள்ள கூட்டணியில் உள்ள அதிமுக நீட்தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருவது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, ஒருகுடும்பத்திற்கு உள்ளேயே வேறு வேறு கருத்து வேறுபாடுகளுடன் இருப்பார்கள் அதே போலதான் கூட்டணி கட்சிகளும் என தெரிவித்தார்.

Leave a Reply