உத்தரப் பிரதேசத்தில் குண்டர்கள் அற்ற ஆட்சியை பா.ஜ.க.வால்தான் தரமுடியும் என அம்மாநிலத்தில் நடந்த பிரச்சாரத்தில் பாஜக. தேசியத்தலைவர் அமித்ஷா பேசினார்.

உத்தரப் பிரதேச மாநில சட்டசபை தேர்தலை முன்னிட்டு, பா.ஜனதா தேசியத்தலைவர் அமித்ஷா அங்கு பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இன்று அவர் ஷாஜாஹன்பூர் பகுதியில் நடந்த பிரச்சாரத்தில் பேசினார்.

அப்போது அவர், உத்தரப் பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ், சமாஜ்வாடி மூத்த தலைவர் சிவ்பால்யாதவ் ஆகியோர் மீது தாக்குதல் தொடுத்தார்.

முக்தார் அன்சாரி குயாமி ஏக்தா தல் கட்சியை சமாஜ்வாடியுடன் இணைப்பது தொடர்பாக, அகிலேஷ் யாதவும், சிவ்பால் யாதவும் நடத்தும் நாடகத்தை நிறுத்தவேண்டும் என்றார் அமித்ஷா.

தக்காளி விவசாய நிலத்தில்தான் விளையும்; தொழிற்சாலையில் அல்ல என்பது கூடத்தெரியாத காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தியுடன் கூட்டுசேர வேண்டுமென அகிலேஷ் யாதவ் விரும்புகிறார், என்று அமித் ஷா தாக்குதல் தொடுத்தார்.

பகுஜன் சமாஜ் கட்சித்தலைவர் மாயாவதியை குறிவைத்த அமித்ஷா, “மிக அதிகளவில் ஊழல் செய்தவர்களின் பட்டியலை தயாரித்தால், அதில் மாயாவதி முதல் இடத்தைப்பிடிப்பார்” என்றார்.

காங்கிரஸ் தலைமையிலான கடந்த பத்தாண்டு ஆட்சியில் ஏராளமான ஊழல்கள் நடந்தது என்றும், நரேந்திரமோடி தலைமையிலான அரசில் ஒருஊழல் புகார்கூட இல்லை என்றும் அமித் ஷா கூறினார்.

முத்தலாக் விஷயத்தில் காங்கிரஸ், பகுஜன்சமாஜ், சமாஜ்வாடி என அனைத்து கட்சிகளும் அமைதியாக இருப்பதாக அமித்ஷா புகார்கூறினார். முத்தலாக் முறை ஒழிக்கப்படவேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply