தமிழ் நாட்டில் ஊரகப் பகுதிகளுக்கான  உள்ளாட்சி தேர்தல் கடந்தமாதம் 27, 30 என  2 தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெற்றது.நடத்தப்பட்ட இந்ததேர்தலில் பதிவான வாக்குகள் ஜனவரி இரண்டாம் தேதி மற்றும் மூன்றாம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப் பட்டது. இதில் தமிழகம் முழுவதும் 315 மையங்களில் வாக்குகள் எண்ணப்பட்டது. தேர்தல்நடந்த 27 மாவட்டங்களில் மொத்தம் உள்ள 515 இடங்களில் 272 மாவட்டகவுன்சிலர் பதவிகளை திமுக கைப்பற்றியுள்ளது. இந்ததேர்தலில் அதிமுக கூட்டணி 240 இடங்களை கைப்பற்றியுள்ளது. மேலும் ஒன்றிய கவுன்சிலரில் திமுக கூட்டணி 2356 இடங்களையும், அதிமுக கூட்டணி 2136 இடங்களையும் கைப்பற்றியுள்ளது.

இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் 31 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்களை கைப்பற்றி பாஜக முதலிடத்தில் உள்ளது. கன்னியா குமரி மாவட்டத்தில் பாஜக 31, காங்கிரஸ் 24, திமுக 21, அதிமுக 16 இடங்களில் வென்றுள்ளது. கடந்தகாலங்களில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் பெற்ற இடங்களைவிட இந்த முறை தமிழகத்தில் அதிக இடங்களில் பாஜக வென்றுள்ளது. தமிழகத்தில் 2011இல் நடந்த உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிட்டு 4 மாவட்ட ஊராட்சி வார்டுகளிலும், 29 ஊராட்சி ஒன்றிய ஒன்றிய வார்டுகளிலும் வெற்றி பெற்றது. தற்போது நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்ற பாஜக, 6 மாவட்ட ஊராட்சி வார்டுகளிலும், 87 ஊராட்சி ஒன்றிய வார்டுகளிலும் வெற்றிபெற்று உள்ளது. இதில் குறிப்பாக திமுக, அதிமுக கட்சிகளை விட கன்னியாகுமரி மாவட்டத்தில் 31 இடங்களை கைப்பற்றியுள்ளது என்பது குறிப்படத்தக்கது.

Comments are closed.