தமிழகத்தில் சட்டஒழுங்கு பிரச்னையை கிளப்பி அதன்மூலம் குறுக்குவழியில் ஆட்சியை பிடித்துவிடலாம் என திமுக பகல்கனவு காண்பதாக தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவுதெரிவிக்கும் வகையில் ஏப்ரல் 25ம் தேதி முழுகடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என சமீபத்தில் திமுக நடத்திய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது. 

இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை, முழு கடையடைப்பு போராட்டத்தால் சட்டம் ஒழுங்குபிரச்னை ஏற்படும். சட்டச ஒழுங்கை சீர்குலைத்து அதன்மூலம் குறுக்குவழியில் ஆட்சியை பிடித்து விடலாம் என திமுக பகல்கனவு காண்கிறது. விவசாயிகளின் துயர் துடைப்பதாக கூறி மக்களின் அன்றாட வாழ்க்கையை சீர்குலைக்க கூடாது. ஏரி, குளங்களை தூர்வார மறந்தவர்களே விவசாயிகளின் துயரத்திற்கு காரணமானவர்கள்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply