வங்கிக்கணக்கில் மாதாந்திர குறைந்தபட்ச இருப்பு தொகையை பராமரிக்காத வாடிக்கையாளர்களிடம் இருந்து அதிகப் படியான அபாரத கட்டணத்தை வங்கிகள் வசூலிக்க கூடாது என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் குறைந்த பட்ச மாதாந்திர இருப்புத்தொகையை பராமரிக்காத வாடிக்கையாளர்களிடம் இருந்து அபராதம்வசூலிக்க வங்கிகள் திட்டமிட்டுள்ளன. இதுகுறித்து மாநிலங்களவையில் பேசிய நிதித்துறை இணையமைச்சர் சந்தோஷ் குமார் கங்க்வால், மாதாந்திர குறைந்தபட்ச இருப்புத்தொகையை பராமரிக்காத வாடிக்கையாளர்களிடம் இருந்து சரியான கட்டணத்தையே வங்கிகள் வசூலிக்க வேண்டுமென அறிவுறுத்தினார்.

தங்களது சேவைக்காக வங்கிகள் அதிகப்படியான கட்டணத்தை வசூலிக்கக்கூடாதென அவர் கேட்டுக்கொண்டார். அதேபோல், ரிசர்வ்வங்கி வழிகாட்டுதல்படி, மாதாந்திர குறைந்தபட்ச இருப்புத்தொகை பராமரிப்பு, அபராதகட்டணம் போன்றவற்றில் ஏதேனும் மாற்றம் செய்தால், வாடிக்கையாளர்களிடம் அதுகுறித்து ஒருமாதத்துக்குள் தெரியப்படுத்த வேண்டும் என்றும், அமைச்சர் தனதுபதிலில் குறிப்பிட்டார்.

Leave a Reply