ஒரு நிறுவனத்தில் குறைந்த பட்சம் 10 தொழிலாளர்கள் இருந்தாலும் தொழிலாளர் வருங்கால வைப்புநிதி (இபிஎஃப்) பிடித்தம்செய்யும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
 
தற்போது 20 மற்றும் அதற்குமேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றும் நிறுவனங்களில் மட்டும் இபிஎஃப் பிடித்தம் செய்யப்படவேண்டியது கட்டாயமாக உள்ளது. இந்தநிலையில் ஒருநிறுவனத்தில் குறைந்தபட்சம் 10 தொழிலாளர்கள் இருந்தாலும் பிஎஃப்-ல் பிடித்தம் கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
 
இதுகுறித்து மத்திய தொழிலாளர் நலன் மற்றும் வேலை வாய்ப்புத் துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா கூறுகையில், "லட்சக் கணக்கான தொழிலாளர்களின் எதிர்காலத்தை பாதுகாக்கும் வகையில் தொழிலாளர் வருங்கால வைப்புநிதி சட்டத்தில் திருத்தம் கொண்டுவர மத்திய அரசு முடிவுசெய்துள்ளது. அதன்படி ஒரு நிறுவனத்தில் குறைந்த பட்சம் 10 தொழிலாளர்கள் பணியாற்றினாலும் அவர்களுக்கு இபிஎஃப் பிடித்தம் செய்யப்படுவது கட்டாய மாக்கப்படும்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply