ஒரு சில எதிர்ப்புக்கு மத்தியில், கடந்த 24-ம்தேதி கோவை வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் இருக்கும் ஈஷாயோகா மையத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆதியோகி சிலையை இந்திய பிரதமர் நரேந்திரமோடி திறந்துவைத்தார். ஈஷாயோகா மையம், பல விதிமுறைகளை மீறி இந்த சிலையை நிறுவியது என்று பல்வேறு சுற்றுச் சூழல் அமைப்புகள் குற்றம்சாட்டி வருகின்றன. இந்நிலையில் நேற்று தமிழக அரசு, ஆதியோகி சிவன்சிலை, மூன்று மண்டபம் கட்ட ஒருலட்சம் சதுர அடி அளவை ஈஷா யோகா மையம் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்தது. பழங்குடியினர் பாதுகாப்புச் சங்கத்தலைவர் ஈஷா மையத்துக்கு எதிராகத் தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு இவ்வாறு வாதிட்டது. 

இதையடுத்து தனியார் தொலைக்காட்சிக்கு அளித்தபேட்டியில் ஈஷா யோகா மையத்தின் நிறுவனர் ஜக்கி வாசுதேவ், 'ஈஷா யோகா மையத்துக்கு எதிராக இருக்கும் குற்றச்சாட்டுகளில் ஒன்றை நிரூபித்தால்கூட, நான் அனைத்திலும் இருந்து விலகிக்கொள்கிறேன்', என்று கூறியுள்ளார். 

ஜக்கிவாசுதேவ் மேலும், 'பலகுழுக்கள் அவர்களுக்கான ஒருகுறிப்பிட்ட கொள்கைகளுடன் இயங்குகிறார்கள். அவர்கள் சுற்றுச் சூழல் சார்ந்த இயக்கங்களாக காட்டிக் கொள்கிறார்கள். அவர்கள் சுற்றுச் சூழலுக்கு எதிராக செய்து வந்த நடவடிக்கைகளை நிறுத்தினேன். நான் அப்படி அவர்களின் நடவடிக்கைகளை நிறுத்திய போது, எனக்கெதிராக ஊடகங்கள் செயல்பட்டதை நீங்கள் பார்த்திருக்கவேண்டும். அனைத்துவிதமான குற்றச்சாட்டுகளும் என் மீது சுமத்தப்பட்டன. இந்த குற்றச்சாட்டுகளில், ஒரேயொரு விஷயத்தை நிரூபித் தால் கூட நான் விலகிக் கொள்கிறேன்.' என்று அந்தநேர்காணலில் பேசியுள்ளார்.  

Leave a Reply