கன்னியாகுமரி: தமிழகத்தின் குளச்சல் துறை முகத்துக்கு மார்ச் 8ந் தேதிக்குள் பிரதமர் மோடி, முதல்வர் ஜெயலலிதா தலைமையில் அடிக்கல் நாட்டபடும் என மத்திய அமைச்சர் நிதின்கட்காரி தெரிவித்துள்ளார்.
 
கன்னியாகுமரி மாவட்டம், மார்த் தாண்டத்தில், 4 வழிச்சாலைக்கான அடிக்கல் நாட்டுவிழா நடைபெற்றது. இந்த விழாவில் மத்திய அமைச்சர் நிதின் கட்காரி கலந்து கொண்டார். அப்போது, காரோடு முதல் காவல்கிணறு வரை 70 கிலோ மீட்டர் நெடுஞ்சாலை பணிகளுக்கு அடிக்கல்நாட்டினார். மேலும் ரூ 2,766 கோடி மதிப்பிலான நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டினார்.
 
அப்போது மத்திய அமைச்சர் நிதின்கட்காரி பேசுகையில், மார்ச் 8 ஆம் தேதிக்குள், பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் ஜெயலலிதா தலைமையில் குளச்சல் துறை முகத்துக்கு அடிக்கல் நாட்டப்படும் என்றார்.

Leave a Reply