மாநில அளவிலான குழந்தைகள் நலக்குழுக்களின் செயல்பாடுகளுக்கு மத்திய பெண்கள், குழந்தைகள் நலத்துறை அமைச்சர் மேனகா காந்தி அதிருப்தி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அனைத்து மாநில முதல்வர்களுக்கும் அவர் சனிக்கிழமை கடிதம் எழுதியுள்ளார்.


மாநிலங்கள் தோறும் தேங்கிநிற்கும் குழந்தைகள் தொடர்புடைய வழக்குகள், அவற்றின் விசாரணை நிலவரம் உள்ளிட்டவை குறித்து அதிகாரிகளுடன் மேனகா காந்தி தில்லியில் சனிக் கிழமை ஆலோசனை நடத்தினார்.
அப்போது அவரிடம் நாட்டிலேயே மிகஅதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில் 439, மத்தியபிரதேசத்தில் 151, தமிழகத்தில் 132, மேற்கு வங்கத்தில் 176, உத்தரப் பிரதேசத்தில் 126, தில்லியில் 107 என்பது உள்பட மொத்தம் 1,811 குழந்தைகள் மீதான வழக்குகள் நிலுவையில் உள்ளதாக அதிகாரிகள்தெரிவித்தனர்.


இதில் 470 வழக்குகள் சுமார் ஆறு மாதங்களாக எந்தமுன்னேற்றமும் இல்லாமல் நிலுவையில் இருப்பதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டனர். இதையடுத்து, சிலமாநிலங்களின் பெண்கள், குழந்தைகள் நலத்துறை அமைச்சர்களை மேனகா காந்தி தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவர்கள் மாநிலங்களில் தேங்கிநிற்கும் வழக்குகளை இரு வாரங்களில் முடிக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டார். இந்த வழக்குகளை விசாரிக்க வேண்டியது மாநில குழந்தைகள் நலக்குழுக்களின் பொறுப்பு என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

Leave a Reply