குழம்பியகுட்டையில் மீன்பிடிக்கும் எண்ணம், பா.ஜ.வுக்கு இல்லை என்று மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறினார். மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

 தமிழக அரசாங்கத்தை மத்தியஅரசு கலைக்கநினைப்பது போன்ற தோற்றத்தையும், அப்படி கலைத்தால் காங்கிரஸ்கட்சி துணை நிற்கும் போன்ற பொய்யான தோற்றத்தையும் காங்கிரஸ் கட்சி உருவாக்குகிறது. தமிழகத்தில் பொறுப்புமுதல்வர், துணை முதல்வர் நியமிக்கப்பட வேண்டும் என பா.ஜ. சொல்வது போன்ற தோற்றத்தையும் காட்டுகிறார்கள். காங்கிரஸ்கட்சி கடந்த காலங்களில் செய்த மிகப் பெரிய தவறுகளை மீண்டும் தமிழகத்தில் அரங்கேற்ற நினைக்கிறார்கள்.

மிகதந்திரமாக செயல்படுகிறார்கள். அந்தமுயற்சி தோற்கும். பிரதமர் மோடிக்கும், முதல்வர் ஜெயலலிதாவுக்கும் இடையே உள்ள நட்பு, பழக்கம், சகோதர, சகோதரிபாசம் என்ன என்பதை இந்தஉலகமே அறிந்து இருக்கிறது. மேலும் குழம்பியகுட்டையில் மீன்பிடிக்கும் செயலை பா.ஜ. செய்யாது என்பதை தமிழக மக்கள் அறிந்துள்ளனர். உடல்நிலை சரியில்லாத நேரங்களில் தனியார் மருத்துவமனைகளில் முக்கியதலைவர்கள் சிகிச்சை பெறுவது சகஜமான ஒன்று தான். அதற்காக அரசு மருத்துவமனைகள் அனைத்தும் மோசமானவை என்று சொல்வதற்கு இல்லை.  இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply