தமிழகதேர்தல் பிரச்சாரத்திற்கு பிரதமர் மோடி மற்றும் அமித் ஷா வருவார்கள் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர  ராஜன் கூறினார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசியவர், தமிழகத்தில் மக்கள் ஆதரவுடன் அரசியல்மாற்றத்தை ஏற்படுத்துவோம் என்ற நம்பிக்கை உள்ளது.

பா.ஜனதா கட்சியின் அங்கம் இல்லாமல் யாரும் ஆட்சிஅமைக்க முடியாது. ததமிழகத்தில் மக்களை சந்தித்து தாமரை சின்னத்துக்கு ஓட்டுகேட்க பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா ஆகியோர் வர உள்ளனர்.

தமிழக அரசியலில் புரட்சி ஏற்படுத்துகின்ற கட்சியாக பாஜக இருக்கும். பாராளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்த கட்சிகள் பல காரணங் களுக்காக தற்போது எங்களுடன் கூட்டணிக்கு வரவில்லை. எங்களுடன் இணைந்துவர உள்ள கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்.

கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கப் பட்டதும் அடுத்தவேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். தமிழகத்தில் மக்கள் நல்லாட்சியை எதிர்பார்க் கின்றனர். அது பாஜக.,வினால் மட்டுமே முடியும். பாரதீய ஜனதா கட்சியில் போட்டியிட தகுதியானவர்களுக்கு வாய்ப்புகள் அளிக்கப்படும் என்றார்.

Tags:

Leave a Reply