கூண்டோடு போவதும் கூட்டுக்குள்போவதும் திமுக.,விற்கு கைவந்தகலை என்றும், துரைமுருகன் அரசியல் நாகரிகத்துடன் பேசவேண்டும் என்றும் பாஜக தமிழக தலைவர்  தமிழிசை சவுந்தர ராஜன் கூறியுள்ளார்.

தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன்  பத்திரிகையாளர்களிடம் அளித்த பேட்டியில் கூறியதாவது, மாநிலத்தின் ஆளுநர் டெல்லிசென்று பிரதமரை சந்திப்பது வழக்கமான ஒன்று. ஆளுநரும் பிரதமரும் சந்தித்துகொள்வதில் எந்தவித ரகசியமும் இல்லை. அதிமுக கட்சிக்கு நெருக்கடிகளை கொடுத்து பாஜக உள்ளே வரவேண்டிய அவசியம்இல்லை.


கூண்டோடு போவது கூட்டோடுபோவது என்பதெல்லாம் திமுக.,விற்கு கைவந்தகலை. துரைமுருகன் போன்றவர்கள் அரசியல் நாகரிகத்துடன் பேசவேண்டும்.  50 வருடங்களுக்கு மேலாக மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ்கார்டன் வேதா இல்லத்தை அரசு நினைவிடமாக மாற்றவேண்டும்.  தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் திறமையானவர். தமிழகமக்களுக்கு தேவையான அனைத்து திட்டங்களையும் முதல்வர் நிறைவேற்றவேண்டும்.  இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply