டில்லி அரசின் முதன்மை செயலாளர் ராஜேந்தர்குமார், வீடு மற்றும் அலுவலகங்களில் நேற்று சிபிஐ., அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

தன்னுடைய அலுவலகத்திலும் சோதனை நடத்தபட்டதாக கெஜ்ரிவால் கூறியிருந்தார். இதனை சி.பி.ஐ., மறுத்துள்ளது. அந்த அமைப்புசார்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், கெஜ்ரிவால் அலுவலகத்தில் நாங்கள் சோதனை செய்யவு மில்லை. சீல் வைக்கவு மில்லை. சோதனை குறித்து கெஜ்ரிவால் அரசு தவறான தகவல்களைசொல்கிறது. விசாரணையை திசை திருப்பும் வகையில் சி.பி.ஐ., மீது தவறான குற்றச்சாட்டுக்கள் கூறப்படுகிறது. சட்ட விதிகளின்படி சோதனை செய்யப்பட்டு ஆவணங்கள் பறிமுதல் செய்யப் பட்டுள்ளன. பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் கோர்ட்டில் தாக்கல் செய்யப்படும் என கூறியுள்ளது.

Leave a Reply