கேரளாவில் கூட்டணி அமைத் துள்ள பாஜக, 14 தொகுதிகளில் போட்டிடுவதாக அறிவித்துள்ளது. 

கேரளாவில் மொத்தமுள்ள 20 தொகுதிகளுக்கு ஏப்ரல் 23ம்தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. 2014 நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ்கூட்டணி 12 இடங்களிலும், இடதுமுன்னணி 8 இடங்களிலும் வெற்றிபெற்றது. இந்தத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடது முன்னணி மற்றும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி இடையே கடும்போட்டி நிலவுகிறது.

இந்நிலையில், கேரளாவில் பாரதிய ஜனதா கட்சி தனது கூட்டணியை இறுதிசெய்துள்ளது. பாஜக கூட்டணியில் பாரத் தர்ம ஜன சேனாவுக்கு (பிடிஜேஎஸ்) 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. கேரள காங்கிரஸ் கட்சிக்கு ஒருதொகுதிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 14 இடங்களில் பாஜக போட்டியிடும் என்று கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் முரளிதரராவ் தெரிவித்துள்ளார்.

மிசோரம் முன்னாள் ஆளுநர் கும்மனம் ராஜசேகரன் பாஜக சார்பில் திருவனந்த புரத்தில், காங்கிரஸ் கட்சியின் சசி தரூரை எதிர்த்து போட்டியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. வையநாடு, திரிச்சூர், இடுக்கி, ஆலத்துர் மற்றும் மாவிலிக்கரா ஆகியதொகுதிகளில் பிடிஜேஎஸ் போட்டியிடுகிறது. கொட்டியம் தொகுதியில் கேரள காங்கிரஸ் போட்டியிடுகிறது. பாஜக தனது வேட்பாளர் பட்டியலை நாளை வெளியிடுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *