கேரளாவில் உள்ள 140 சட்டசபை தொகுதிகளுக்கு கடந்த 16–ந்தேதி சட்டசபை தேர்தல் நடந்தது. ஆளும் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஒரு அணியாகவும், எதிர்க் கட்சியான இடதுசாரிகள் மற்றொரு அணியாகவும் போட்டியிட்டனர். இவர்களை எதிர்த்து பாரதீய ஜனதா 3-வது அணியாக களம் இறங்கியது.

இன்று வெளியான தேர்தல்முடிவுகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் சேர்ந்து 85 தொகுதிகளிலும் வெற்றிபெற்றுள்ளது. இதன் கேரளாவில் காங்கிரஸ் ஆட்சி அகற்றப்பட்டு மீண்டும் கம்யூனிஸ்ட் ஆட்சி அமைக்கவுள்ளது.

கேரளாவில் மூன்றாவது அணியாக பாஜக. களமிறங்கியது. இதுவரை கேரளசட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்றது இல்லை. இந்நிலையில் இன்று வெளியான தேர்தல்முடிவில் கேரளாவை சேர்ந்த மூத்த பாஜக. தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான ஓ.ராஜகோபால் 8000 ஓட்டுகள் வித்தியாசத்தில் கம்யூனிஸ்ட் வேட்பாளர் சிவன் குட்டியை தோற்கடித்து வெற்றிப் பெற்றார்.

ஓ.ராஜகோபால் வெற்றிப் பெற்றதுதன் மூலம் கேரளசட்டமன்றத்தில் முதல் முறையாக பா.ஜ.க. தனது கணக்கை தொடங்கியது.

Leave a Reply