கேரளமாநிலம் கன்னூர் மாவட்டத்தில் ரெமித் என்ற 32 வயதான பாரதிய ஜனதா தொண்டர் வெட்டி படுகொலை செய்யப் பட்டுள்ளார்.
 

அம்மாநில முதல்வர் பினராயிவிஜயன் தொகுதியான பினராயி நகரில் இந்தசம்பவம் நடைபெற்றுள்ளது. இதே கன்னூர் மாவட்டத்தில், கடந்த இரண்டுதினங்களுக்கு முன்பு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொண்டர் மோகனன் (52 ) என்பவர் படுகொலை செய்யப்பட்டார். இதற்கு பழிவாங்கும் வகையில் இன்றையகொலை நடைபெற்றுள்ளதாக கேரள பா.ஜ.க., தரப்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
 
இந்நிலையில், பா.ஜ.க., தொண்டர் கொலை செய்யப் பட்டுள்ளதை கண்டித்து, நாளை முழு அடைப்பு போராட்டத்திற்கு பா.ஜ.க அழைப்பு விடுத்துள்ளது. காலை 6 மணிமுதல் மாலை 6 மணிவரை இந்த போராட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
கடந்த 2002 மே மாதம், ரெமித்தின்தந்தை சோடன் உத்தமன், கீழுர் அருகே படுகொலை செய்யப் பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply