கேரள மாநிலம், கண்ணூரில் சந்தோஷ் என்ற பாஜக பிரமுகர், வீட்டில் தனியாக இருந்த போது தாக்கப்பட்டதில் உயிரிழந்தார். இந்தவழக்கு தொடர்பாக, தற்போது சி.பி.எம் பிரமுகர்கள் ஆறுபேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சி.பி.எம் ஆட்சிக்கு வந்தபிறகு, கேரளாவில் இதுவரை 11 அரசியல் கொலைகள் நடந்துள்ளன. குறிப்பாக, கண்ணூரில் வன்முறைகள் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த ஆண்டு மே மாதத்தில் இருந்து தற்போதுவரை, 400-க்கும் மேற்பட்ட அரசியல் வன்முறை வழக்குகள் பதியப் பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவிக்கின்றனர்.

Leave a Reply