கல்வியில் புதுமையில்லை, பள்ளிகளில் மாணவர்கள் கேள்விகேட்க முடியாத சூழ்நிலைகள் உள்ளன, ஏற்கெனவே இருப்பதைத் தக்கவைக்கும் போக்குக்கு எதிராக மாணவர்கள் செயல்படுவது அவசியம் என மத்திய மனிதவளத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் வலியுறுத்தியுள்ளார்.

ஆனந்த பஜார் பத்திரிகை குழு ஏற்பாடுசெய்த ‘இன்ஃபோகாம் 2016’ நிகழ்ச்சியில் பேசிய ஜவடேகர் கூறியதாவது:

சாராம்சமாக, கிளர்ச்சியின் விளைவே புதுமை. ஏற்கெனவே இருக்கும் நடைமு றைகளைக் கொள்கைகளை தக்கவைப்பதற்கு எதிராக செயல்பட வில்லையெனில் அதனை எதிர்க்க வில்லையெனில் எந்த புதுமையையும் கொண்டுவர முடியாது. மோடி அரசு கல்வியில் புதுமைபுகுத்த கவனம் செலுத்திவருகிறது.

இந்தியக் கல்வித் துறையில் புதுமை இல்லாததற்கு காரணம் என்ன? நாம் கேள்விகள்கேட்க அனுமதிக்கவில்லை. கேள்விகேட்கும் திறனை நாம் வளர்த்தெடுக்க விரும்ப வில்லை. பள்ளியில் மாணவர்கள் கேள்விகேட்டால் நாம் உட்கார் என்று தடைபோடுகிறோ. இது இப்படியே தொடர்வதுகூடாது. கேள்விகேட்கும் திறனை நாம் வளர்த்தெடுப்பது அவசியம். குழந்தைகள் கேள்விகேட்க வேண்டும்.

குழந்தைகளை கேள்விகேட்க அனுமதித்தால் புதுமை தானாகவே விளையும். ஏற்கெனவே இருக்கும் நடைமுறைகளை கேள்விக்குட் படுத்தி மாற்றங்களை ஏற்படுத்தும்.பிரதமர் நரேந்திரமோடியின் நீடித்த வளர்ச்சி இயற்கையை எதிர்மறையாக பாதிக்காது, மாறாக அனை வருக்கும் முன்னேற்றம் என்பதை அடிப்படையாகக் கொண்டது இதற்கு புதுமைபுகுவது அவசியம்.

தகவல் தொழில்நுட்ப துறையில் ஏற்பட்டவளர்ச்சி ஊடகத்துறையில் புரட்சிகர மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. புதியகருத்துகளின் விளைவே மாற்றம். இதற்கு பலர் எதிர்ப்புதெரிவிக்கலாம், ஆனால் நேர்மறையாக சிந்திக்கவெண்டும் புதுமை குறித்து நம் பார்வைகளை கூர்மையாக்க வேண்டும் இவ்வாறு கூறினார் ஜவடேகர்.

Leave a Reply