டில்லியின் கூலி தமிழிசைக்கு பதில்சொல்ல நான் விரும்பவில்லை என்று சொல்லியிருக்கிறார் தாமஸ் பாண்டியன்.

ஒரு குற்றவாளியின் முன்னாள் கைகட்டி வாய்பொத்தி கைக்கூலியாக செயல்படும் தாமஸ் பாண்டியனுக்கு தமிழக பாஜக தலைவரை விமர்சனம் செய்வதற்கு தகுதியில்லை.

உசிலம்பட்டி உத்தப்பநாயக்கனூர் கிராமத்தின் மக்கள் 2011 ம் ஆண்டு தங்கள் கிராமத்தில் 8 ஏக்கர் ஓடை புறம்போக்கை ஆக்கிரமித்ததாக தாமஸ் பாண்டியன் மற்றும் அவரின் மகன்கள் மீது புகார் கொடுத்தது உண்மையா இல்லையா? தென் சென்னை மின் வாரிய ஊழியர் சங்கத்தின் நிலத்தை சட்ட விரோதமாக விற்றதால், அவர்கள் தாமஸ் பாண்டியன் மீது புகார் கொடுக்க அவர்களை கட்சியிலிருந்து நீக்கி விட்டது உண்மையா இல்லையா? அரசு சொத்தை ஆக்கிரமித்த ஒருவர், சொந்த கட்சி தொண்டர்களின் சொத்தை சட்ட விரோதமாக விற்று அவர்களை கட்சியை விட்டு நீக்கிய 'கை'க்கூலிகள் பாஜகவின் மாநில தலைவரை தரம் தாழ்ந்து கேவலமாக பேசியிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. மற்ற கட்சிகளின் தலைவர்களும், ஊடகங்களும் கண்டிக்காமல் வேடிக்கை பார்த்தால் அது அவர்களின் பொறுப்பற்ற தன்மையையே உணர்த்தும்.

நாராயணன் திருப்பதி.

Leave a Reply