கொரோனா வைரஸுக்கு சாதி, மதம், இனம் என்ற பாகுபா டெல்லாம் கிடையாது. எனவே, கொரோனாவுக்கு எதிரான போரில் வெற்றிபெற நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படவேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர், இன்று வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ” கொரோனா வைரஸுக்கு ஜாதி, இனம், மதம், மொழி, தேசங்களின் எல்லைகள் என்ற எந்த பாகுபாடும் கிடையாது.

எனவே, கொரோனாவுக்கு எதிரான போரில் வெற்றிப் பெற நாம் தொடர்ந்து ஒற்றுமையுடனும், சகோதர உணர்வுடனும் இருந்து செயல்படவேண்டியது அவசியம்” என மோடி கூறியுள்ளார்.

மேலும், “உலகளவில் தற்போது எழுந்துள்ள பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்கான திறமை இந்தியர்களிடம் உள்ளது. இந்தியர்களின் இந்ததிறனும், அறிவும் இந்தியாவை மட்டுமின்றி ஒட்டுமொத்த உலகையும், மனிதகுலத்தையும் வழிநடத்துவதாக இனிஇருக்கும்” என்று மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஊரடங்கு நீட்டிப்பு: நிபுணர்களுடன் கலந்தாலோசிக்கவில்லையா மோடி?

அத்துடன், ” கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பிந்தைய நவீன உலகில், இந்தியா தவிர்க்க முடியாத சக்தியாக திகழ்வதற்கான வாய்ப்பு நமக்கு உருவாகியுள்ளது. இந்தவாய்ப்பை நாம் சரியாக பயன்படுத்தி கொள்ள வேண்டும்” என்றும் பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.

Tags:

Comments are closed.