கொல்கத்தா மேம்பால கட்டிடவிபத்து கடவுள் விடுத்துள்ள எச்சரிக்கை. திருணமூல் காங்கிரசிடம் இருந்து மக்களைகாப்பாற்ற விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை அது. மேம்பால விபத்து என்பது மிகவும் மோசமானவிபத்து. திறமையான தலைவர் என்றால் அவர் மக்களை காப்பாற்றவே முனைப்புகாட்டுவார்.

ஆனால் மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தாபானர்ஜி, பழியை இடது சாரிகள் மீது போட்டுவிட்டு தப்பிக்க பார்க்கிறார். இறந்தவர்களுக்கு உரிய மரியாதையை வழங்க மம்தாபானர்ஜி தவறிவிட்டது,

அவரது எண்ணத்தில் தற்போது முதல்வர் நாற்காலி மட்டுமே, அப்பாவிமக்கள் அல்ல. எந்த வகையான முதல்-மந்திரி அவர்? மாநிலத்தின் வளர்ச்சிகுறித்த ஆலோசனை கூட்டத்திற்காக மத்திய அரசு அழைக்கும் பொழுதெல்லாம், அவர் புறக் கணித்தார். அது அவருடைய மாநிலத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றாலும் கூட, மோடி அந்தகூட்டங்களை கூட்டினார் என்பதற்காகவே அவர் கலந்து கொள்ளவில்லை. ஆனால் மம்தா பானர்ஜி டெல்லிசெல்லும் பொழுதெல்லாம், சோனியா காந்தியை சந்தித்து ஆசி பெற்றுக்கொள்கிறார்.

கடந்த சில தினங்களுக்கு கொல்கத்தாவில் நடைபெற்ற மேம் பால கட்டிட விபத்தின்போது மேற்குவங்காள அரசு உடனடியாக மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு பதிலாக குறைகூறுவதில் அக்கறை செலுத்தியது. இடதுசாரி கட்சி ஆட்சியின் போது மேம்பாலம் தொடங்கப்பட்டதாக கூறினார். மேம்பாலம் கட்டி முடித்துவிட்டால் முந்தைய அரசை பாராட்டுவாரா? அனைத்து பெருமை களையும் தனக்கே உரித்தாக்கிக் கொள்வார்.

வளர்ச்சியை பற்றி பேசுவதற்குபதிலாக திரிணாமூல் காங்கிரஸ் கட்சியும் இடதுசாரிகளும் ஒருவரை ஒருவர் மாறிமாறி வசைபாடி கொள்கின்றனர்.

பிரதமர் நரேந்திர மோடி வங்காள மாநிலத்தின் மடரிஹட், ஆசன்சோல் மற்றும் சிலிகுரி பகுதியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசியது,

Tags:

Leave a Reply