மஹாராஷ்டிராவில், போலீசார் – நக்சல்கள் இடையே நடந்த சண்டையில், கொல்லப்பட்ட நக்சலைட்களின் எண்ணிக்கை 37 ஆக அதிகரித்துள்ளது.


. மஹாராஷ்டிராவில், முதல்வர் தேவேந்திரபட்னவிஸ் தலைமையில், பா.ஜ., – சிவசேனா கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு, கட்சிரோலி மாவட்டத்தில் உள்ள தட்காவ்ன் வனப்பகுதியில், நக்சல்கள் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல்கிடைத்தது. இதையடுத்து, நக்சல் வேட்டையில் சிறப்புபயிற்சி பெற்ற கமாண்டோ படையினர், தேடுதல் வேட்டையில் இறங்கினர். அப்போது, பாம்ராகாட் என்ற இடத்தில் பதுங்கியிருந்த நக்சலைட்களை, போலீசார் சுற்றிவளைத்தனர். இதையடுத்து, போலீசாரை நோக்கி, நக்சலைட்கள் தாக்குதல் நடத்தினர். போலீசாரும் பதிலடி கொடுத்தனர். இருதரப்புக்கும் நீண்ட நேரம் துப்பாக்கிச் சண்டை நீடித்தது. இதில், 14 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்

  தொடர்ந்து நேற்று கபேவஞ்சா வனப்பகுதியில் நடந்த மற்றொரு மோதலில் 6 நக்சலைட்கள் சுட்டுகொல்லப்பட்டனர். அவர்களின் உடல்களை போலீசார் கைப்பற்றினர்.இந்நிலையில் போலீசாருடன் நடந்த மோதலில் கொல்லப்பட்ட நக்சலைட்களின் எண்ணிக்கை 37 ஆக அதிகரித்துள்ளது.இது தொடர்பாக அம்மாநில உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், என்கவுன்டர் நடந்தவனப்பகுதியில் கடந்த 22ம் தேதி 16 நக்சல் உடல்களை போலீசார் கைப்பற்றினர். கனமழை மற்றும் ஆள்பற்றாக்குறை காரணமாக தேடுதல் பணி நிறுத்தப்பட்டது. இன்று மீண்டும் தேடுதல்பணி நடந்தது. அதில் மேலும் 15 உடல்கள் கைப்பற்றப்பட்டன. இன்னும் தேடுதல்பணி நடந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply