"அனைவருக்குமான ஒருங்கிணைந்த வளர்ச்சி' என்ற தாரகமந்திரத்தின் அடிப்படையில் பாஜக செயல்பட்டு வருகிறது. வேறு எந்த கட்சிக்கும் இல்லாத பல சிறப்புகள் நமக்கு (பாஜக) உள்ளன.

கொள்கை மீதான அர்ப்பணிப்பு உணர்வு மற்றும் வாரிசு அரசியல் இல்லாத உள்கட்சிஜனநாயகம் பாஜகவில் தான் உள்ளது. இத்தகைய சிறப்பியல்புகளை சர்வதேச சமூகரங்கில் நமது கட்சித் தொண்டர்கள் கொண்டு சேர்க்க வேண்டும்.

பிரிட்டீஷ் ஆட்சிக்காலத்தில் காங்கிரஸ் கட்சி பல்வேறு இன்னல்களை எதிர்கொண்டது. ஆனால், சுதந்திரத்துக்குப் பிறகு அதைக்காட்டிலும் அதிக அளவிலான கஷ்டங்களையும், சவால்களையும் பாஜக சந்தித்துள்ளது.

பாஜக தோன்றிய காலத்திலிருந்து இப்போது வரை நமதுதொண்டர்கள் கடும் இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர். நமது ஒவ்வொரு செயல்பாடுகளும் தவறாக சித்திரிக்கப் படுகின்றன.

அண்மையில் மேற்குவங்கத்தில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலின்போது பாஜக சார்பில் தேர்தல் அலுவலகங்கள் அமைக்க பெரும்பாலானோர் இடம் கொடுக்கவில்லை. அதற்குக்காரணம் அந்த மாநிலத்தை ஆளும் திரிணமூல் காங்கிரஸின் அச்சுறுத்தல்தான். உண்மையை சொன்னால், வேறு எந்தக்கட்சிகளைச் சேர்ந்தவர்களும் பாஜக வேட்பாளர்கள் அளவுக்கு டெபாசிட் தொகையை இழந்திருக்க மாட்டார்கள். வெற்றி – தோல்வியைப் பற்றி கவலைகொள்ளாமல், முன்னெடுத்த கொள்கைக்காக செயல்படுவது நம் கட்சிதான்.

எல்.கே.அத்வானி, வாஜ்பாய், முரளி மனோகர் ஜோஷி போன்ற தலைவர்கள் நம்பக்கம் இருந்திருந்தால் சிறப்பாகச் செயலாற்றி வெற்றிபெற்றிருக்க முடியும் என்று பிற கட்சிகளைச் சேர்ந்தவர்கள் நினைத்திருக்க வாய்ப்புள்ளது. ஏனென்றால், கொள்கைகளுக்காக மட்டுமேவாழும் தலைவர்கள் அவர்கள்.

பாஜக தொண்டர்களை பொருத்தவரை கட்சி நிகழ்ச்சிகளுக்கு கூட்டத்தை திரட்டும் நோக்கத்திற்காக அவர்கள் பணியாற்றுவதில்லை. பரபரப்பான விஷயங்களைப்பற்றி கவர்ச்சியாக பேசினால் கூட்டத்தைக்கூட்ட முடியும். ஆனால், தொண்டர்கள் அதற்கு முக்கியத்துவம் அளிக்காமல் கட்சியின் கொள்கைகளுக்கு மட்டுமே மதிப்பளித்து செயலாற்று கின்றனர் என்றார் பிரதமர் மோடி.

Leave a Reply