உத்தரப் பிரதேசம், உத்தராகண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டப் பேரவைத் தேர்தல் அடுத்தமாதம் 4-ம் தேதி தொடங்கி மார்ச் 8-ம் தேதிவரை நடைபெறுகிறது. இதில் கோவாவை பொறுத்த வரையில் மொத்தமுள்ள 40 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக பிப்ரவரி 4-ம் தேதி வாக்குப் பதிவு நடைபெறவிருக்கிறது.

தேர்தலையொட்டி பாஜக 29 தொகுதிகளுக்கான முதற் கட்ட வேட்பாளர் பட்டியலை அண்மையில் வெளியிட்டது. இந்நிலையில் 7 வேட்பாளர்கள் அடங்கிய இரண்டாவது கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக மேலிடம் இன்று தில்லியில் வெளியிட்டுள்ளது. மீதமுள்ள 4 தொகுதிகளுக்கான வேட்பாளரை விரைவில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply