அருப்புக்கோட்டை கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி 4 மாணவிகளை பாலியலுக்கு அழைப்பது போல் செல்போனில் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த விவகாரத்தில் கவர்னரை தொடர்புபடுத்தி அரசியல்கட்சிகள் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து அவர் பதவி விலகவேண்டும் என்று கோரி வருகின்றன.


இதற்கு பதில் தெரிவிக்கும் வகையில் கவர்னர் பன்வாரிலால் நேற்று நிருபர்களை சந்தித்து பேட்டிஅளித்தார். அவர் கூறுகையில், “பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தை விசாரிப்பதற்காக ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆர்.சந்தானம் தலைமையில் ஒருநபர் விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் குற்றவாளிகள் தண்டிக்கப் படுவது உறுதி.

பல்கலைக்கழக வேந்தர் என்ற முறையில் கவர்னருக்கு அந்த பல்கலைக் கழகங்களின் மீது தனி அதிகாரம் உண்டு. பேராசிரியையின் முகத்தை கூட நான்பார்த்தது இல்லை என்று கூறினார்.

பூந்தமல்லியை அடுத்த பழஞ்சூர் காசி விசாலாட்சி விஸ்வநாதர் ஆலயத்திற்கு எச்.ராஜா தரிசனம் செய்ய வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

பல்கலைக்கழக உரிமையில் தலையிட மாநிலஅரசுக்கு எந்த அதிகாரமும் கிடையாது. கவர்னர் தனது பணியை முறையாக செய்துவருகிறார். பேராசிரியை நிர்மலாதேவி விவகாரத்தில் கவர்னர் அதிகாரவரம்பிற்கு உட்பட்டு செயல்படுகிறார்.

காவிரி நீரி விவகாரத்தில் தமிழகத்திற்கு மத்திய அரசு உதவவிரும்புகிறது. ஆனால் விதிகள் மாநில பட்டியலில் இருப்பதால் உதவுவதில் முட்டுக்கட்டை ஏற்படுகிறது.

இந்துசமய அறநிலையத் துறை மற்றும் வருவாய்த் துறையின் கூட்டு சதியால் கோவில் நிலங்கள் ஆக்கிரமிக்கப்படுகிறது. தமிழகத்தில் கோவில்நிலங்களை அறநிலையத்துறை நிர்வகிக்க முடியவில்லை என்றால் விட்டு செல்லவும், தமிழகத்தில் உள்ள கோவில் சொத்துக்களை முறையாக பராமரித்தாலே ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம்கோடி வருவாய் கிடைக்கும். இதன் மூலம் கல்வி மற்றும் மருத்துவத்தை இலவசமாக வழங்கலாம்.

கோவில் நிலங்களில் வசிப்பவர் களுக்கு பட்டா வழங்கப்படும் என்று அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கூறியுள்ளதை கண்டிக்கிறேன். சட்டம்தெளிவாக உள்ளது. கோவில் நிலங்களை யாரும் ஆக்கிரமிப்புசெய்ய முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்

Leave a Reply