டில்லி விகாஸ் புரி என்ற பகுதியில் 40 வயதான பல் மருத்துவர் பங்கஜ் நரங் என்பவர் தன குடும்பத்துடன் வசித்து வந்தார். நேற்றைய முன்தினம் (24/03/2016) வங்காளதேசத்துடன் நடந்த டி-20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றதை கொண்டாடும் வகையில் இரவு தன் 8 வயது மகனுடன் தன வீட்டில் கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்த போது, வீட்டை விட்டு பந்து சாலைக்கு சென்றதையடுத்து, பந்தை அவரின் மகன் எடுக்க சென்றபோது சாலையில் வேகமாக சென்ற இரு சக்கர வாகனம் ஒன்று மோதியதாக தெரிகிறது.

தன் மகன் மீது மோதிய அந்த வாகனத்தில் சென்ற 23 வயதான நசீர் மற்றும் அவருடன் சென்றவரை இது குறித்து கண்டித்த போது, அவர்கள் இருவரும் தகராறு செய்து விட்டு சென்று விட்டதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து சிறிது நேரத்தில், நடுஇரவு 12 மணிக்கு, நசீர், மேலும் 13 பேருடன் பங்கஜ் நரங் வீட்டிற்கு சென்று அவரை வெளியில் இழுத்து இரும்பு கம்பிகள், ஹாக்கி மட்டைகள், கற்களை கொண்டு தாக்கி கொலை செய்துள்ளனர். நடந்தது ஒரு படுகொலை. இது வரை 8 பேர் (அனைவரும் இஸ்லாமியர்கள்) கைது செய்யப்பட்டுள்ளனர். படுகொலை செய்யப்பட்டவர் ஹிந்துவாக இருந்தாலும், கொலை செய்தவர்கள் இஸ்லாமியர்களாக இருந்தாலும் இதை மத ரீதியிலான வன்முறை என்று பார்க்ககூடாது என்று ஒரு சில ஊடகங்கள் மற்றும் சில அரசியல் வாதிகள் சொல்கின்றனர்.

இதில் மத சாயம் இருக்கிறதா இல்லையா என்ற வாதத்திற்கு செல்ல வேண்டாம் என்றாலும், தாத்ரி சம்பவத்தில் அக்லக் என்பவர் அடித்து கொல்லப்பட்ட போது, 'ஐயோ' ஒரு இஸ்லாமியரை ஹிந்துக்கள் கொன்று விட்டனரே என்று கதறி கூப்பாடு போட்டவர்கள், சகிப்பின்மை குறித்து தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் விவாதம் செய்தவர்கள், பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் உணவு விடுதியில் தனக்கு அளிக்கப்பட சப்பாத்தி சரியில்லை என்ற வேகத்தில் அதை சாப்பிட்டு பார் என்று அந்த சிப்பந்தியின் வாயில் திணித்த போது, 'ஐயோ' ஒரு இஸ்லாமியரை, அதுவும் நோன்பு இருக்கும் இஸ்லாமியர் மீது இப்படி செய்யலாமா? என்று ஓலமிட்டவர்கள், பாராளுமன்றத்தில் ரகளையில் ஈடுபட்டவர்கள், நேற்று முன் தினம் டில்லியில் நடந்த இந்த படுகொலையை, ஒரு தெரு சண்டையின் விளைவு என்று சொல்லுவது ஹிந்து மதத்தின் மீதான சகிப்பின்மையா? அல்லது போலி சகிப்பு தன்மையா? இஸ்லாமியர்கள் மீதான தாக்குதல்கள் என்றால் ஹிந்துக்களின் வெறி என்றும், ஹிந்துக்கள் மீதான தாக்குதல்கள் என்றால் அது தெரு சண்டையின் விளைவு அல்லது உணர்ச்சிவயப்பட்டு நடந்த விவகாரம் என்று சொல்வது முரண்பாடான நிலைப்பாடே.

ஒரு உயிரை பறிப்பது என்பது மிக கொடூரமானது. ஆனால் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் மற்றும் முற்போக்குகள், மதசார்பின்மை என்று பேசி, மத வன்முறைகளை, பதட்டங்களை அதிகரிக்க செய்வதே தங்களின் வாடிக்கையாக்கி கொண்டுள்ளன. கொலையில் அரசியலை புகுத்துவது, மதத்தை, சாதியை முன்னிறுத்தி பதட்டத்தை உருவாக்கி நாட்டில் பிரிவை உண்டாக்குவது, வலிமையான அரசை பலவீனமாக்க துடிப்பது போன்ற கீழ்த்தரமான, வஞ்சக எண்ணத்தோடு சூழ்ச்சி அரசியல் செய்து வருவது வன்மையாக கண்டிக்கபடவேண்டியது மட்டுமல்ல. தண்டிக்கபடவேண்டியதும் கூட.

காங்கிரஸ், கம்யூனிஸ்ட் போன்ற இந்த அமைப்புகளின் சூழ்ச்சியை, நரித்தனத்தை புரிந்து கொண்டு, நாட்டில் உண்மையான மதச்சார்பின்மை மற்றும் அமைதி நிலவ, பொருளாதார ரீதியாக முன்னேற, இஸ்லாமிய மற்றும் இதர சிறுபான்மை சமுதாயங்களை இந்த கட்சிகள் வாக்குவங்கிகளாக கருதியே பரிதாபம் காட்டுவது போல் நடிக்கின்றன என்பதை உணர்ந்து பாஜகவின் உண்மையான மதசார்பற்ற தன்மையை உணர்ந்து நாட்டை முன்னேற்ற பாதையில் செலுத்திட இஸ்லாமிய சமுதாயமும் மற்ற சிறுபான்மை சமுதாயங்களும் முன்வரவேண்டும். போலி மத சார்பின்மை பேசும் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் மற்றும் திராவிட இயக்கங்களை, தேர்தலில் புரந்தள்ளுவதின் மூலமே இது சாத்தியமாகும்.

மதசார்பின்மை என்று பேசுபவர்களே மதவாதத்தை தூண்டுபவர்கள் என்பதை சிறுபான்மையினர் உணர்வார்களா? அவர்களை தூக்கி எறிந்து, மத நல்லிணக்கத்தை நாட்டில் நிலவ செய்வார்களா? காலம் பதில் சொல்லும். காத்திருப்போம்.

நாராயணன் திருப்பதி.

Leave a Reply