நான் செய்தவை சரியானது தான் என்று எப்பொழுதும் சொல்ல மாட்டேன்.ஆனால் அவை யாவும் நாட்டை முன்னேற்றத்திற்க்காக மட்டுமே செய்யப்பட்டவை என்பதை என்னால் உறுதியாக சொல்ல முடியும் என்று
சிங்கப்பூரை செதுக்கிய சிற்பி சிங்கப்பூரின் முதல் பிரதமர் லீ குவான் யூ அடிக்கடி மக்களிடம் சொல்வார்..

கிட்டத்தட்ட அதே நிலையில் தான் தற்பொழுது மோடியும் இருக்கிறார்.நாட்டில் ஊழல் மறைந்து கறுப்பு பணம் ஒழிந்து ஏழை மக்களின் வாழ்வில் முன்னேற்றம் வர வேண்டும் என்று நினைக்கி றார்,அதற்காக சில கட்டுப் பாடுகளை கொண்டு வருகிறார்.இது நிறைய பேருக்கு பிடிக்காது.அதுக்காக உங்களுக்கு பிடித்ததை செய்ய
வேண்டிய அவசியம் அவருக்கில்லை..இந்த நாட்டுக்கு எது தேவையோ அதை செய்கிறார்.

இந்த நாட்டில் கறுப்பு பணம் எப்படி ஹவாலா மூலமாக கை மாறுகிறது என்பதற்கு ஒரு சிறிய உதாரணம் சொல் கிறேன்.என்னுடைய சொந்தக்காரர் ஒருவர் கோவில் பட்டியில் தீப்பட்டி வியாபாரம் செய்கிறார்.இவர் டெல்லி யில் உள்ள ஒருவருக்கு பத்து லட்சம் மதிப்புள்ள தீப்பட்டி யை விற்கிறார்.இந்த டெல்லிவாலா மதுரையில் உள்ள எலக்டிரிக்கல் பொருள்கள் விற்கும் ஒரு கடையில் போய் பத்து லட்சத்தை வாங்கி கொள்ளும் மாறு கோவில்பட்டி
வாலாவுக்கு போன் மூலம் சொல்லி விடுவார்.

கோவில்பட்டி வாலாவும் மதுரை வந்து முகம் தெரியாத அந்த எலக்டிரிக்கல் கடைக்காரரிடம் போய் பத்து லட்சம்
வாங்கிக்கொண்டு வரட்டுமா சேட்ஜி என்று டாட்டா காட்டி விட்டு போய் விடுவார்..பாருங்கள் தீக்குச்சி விற்றவர் எலக்ரிக்கல் பொருட்கள் விற்கும் கடைக்கு வந்து தனக்கு சேரவேண்டிய பணத்தை வாங்கி கொண்டு செல்கிறார்.

எந்த ஒரு சின்ன வரியும் இல்லாமல் லட்சம் கோடிகளில்  இந்தியாவில் பிசினஸ் நடந்து கொண்டு இருக்கிறது,,ஆமா இந்த எலக்டிரிக்கல் கடைக்காரர் ஏன் சம்பந்தமே இல்லாத தீப்பட்டிகாரருக்கு பணம் கொடுக்கிறார் என்று கேள்வி வருகிறதா? வரணும் அப்பொழுது தான் உங்களுக்கு இந்த ஹவாலா மேட்டர் எல்லாம் தெரிய ஆரம்பிக்கும்..

மதுரையில் இருக்கிற எலக்டிரிக்கல் கடை சேட்டு டெல்லி யில் இருக்கிற எலக்டிரிக்கல் பொருட்கள் தயாரிக்கும்
கம்பெனிகளிடம் பத்து லட்சத்துக்கு சரக்கு அனுப்ப சொல்லி வாங்கி கடையில் அடுக்கி வைத்து விடுவார். பிறகு பணத்தை டெல்லியில் உள்ள எலக்டிரிக்கல் கமபெ னிக்கு எப்படி செட்டில் செய்வார் தெரியுமா?

டெல்லியில் உள்ள தீப்பட்டி வாங்கிய சேட்ஜி அங்குள்ள எலக்டிரிக்கல் கம்பெனிக்கு பத்து லட்சத்தை கொடுத்து விடுவார்.பதிலுக்கு மதுரையில் உள்ள எலக்ட்டிரிக்கல் கடைக்கார சேட்ஜி கோவில்பட்டி தீப்பட்டிகாரருக்கு பத்து
லட்சத்தை அளித்துவிடுவார்.பாருங்கள் டெல்லியில் இருந்து கோவில்பட்டிக்கு பத்து லட்சம் எந்த கணக்கும்
இல்லாமல் செல்கிறது..இது தாங்க கறுப்பு பணம்.

இப்படி இந்தியாவில் அனைத்து இடங்களிலும் வங்கிக்கு வராமல் பணம் புழங்கிக்கொண்டு இருக்கிறது.இதை தடுக்க தான் இந்த ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்கிற அறிவிப்பு..இனிமேல் அவர்கள் எப்படி புதிய ரூபாயில்
பத்து லட்சத்தை புரட்டுவார்கள்?

ஆதலால் இனி அவர்கள் வங்கிக்கு வந்தே ஆக வேண்டும் கூடவே விற்கும் பொருளுக்கு வரியும் கட்ட ஆரம்பித்து
விடுவார்கள்.இதனால் பாருங்கள் ஆரம்பத்தில் அவருக்கு கஷ்டமாக இருந்தாலும் தான் விற்கும் பொருளுக்கு
சேல்ஸ் டாக்ஸ் கட்ட ஆரம்பித்து விடுவார்.பிறகு அவர் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க வேண்டிய அவசியம்
இல்லாமல் போகும்..

ஆக ஒரு விளைவினால் அரசாங்கத்திற்கு வருமானமும் வருகிறது கூடவே ஊழலும் குறைகிறது.இது தாங்க
நல்லாட்சியின் இலக்கணம்.இப்ப பாருங்கள் காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள இரு கிராமங்களில் ஸ்மார்ட் போன் மூலம் காய்கறி வாங்கும் வசதியை இந்தியன் வங்கி ஏற்படுத்தியுள்ளது.

மோடி கடந்த ஆண்டு டிஜிட்டல் இந்தியா திட்டத்தை அறிமுகப்படுத்தியபோது, இந்தியன் வங்கி சார்பில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஒரக்காட்டுப்பேட்டை, திருவள் ளூர் மாவட்டத்தில் கல்பாக்கம் ஆகிய இரு கிராமங்களை இந்தியன் வங்கி தத்து எடுத்து இருந்தது.இந்த கிராமத்தில் உள்ளவர்கள் அனைவருக்கும் ஜன்தன் திட் டத்தின் கீழ் அக்கவுண்டு உள்ளது.பார்த்தீர்களா எப்படி ஒரு திட்டமிடல்

தற்பொழுது 1000 ரூபாய் 500 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்கிற அறிவிப்பினால்100, 50, 20, 10 ஆகிய ரூபாய் நோட்டுகளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் சிறு மளிகைக் கடைகள், பெட்டிக் கடைகள், சில்லறை காய்கறி கடைகளி ன் விற்பனை பாதிக்கப் பட்டுள்ளது.இதற்கு தீர்வு காணும் வகையில் இந்தியன் வங்கி இங்குள்ள வணிகர்களிடம்இந்தியன் வங்கியின் இன்ட்பே ஆப்பை மொபைலில் இறக்கி அதன் மூலம் பண பரிவர்த்தனை செய்ய சொல்லி யுள்ளது.

அதோடு, அக்கிராமங்களில் உள்ள இந்தியன் வங்கியில் அக்கவுண்ட் இல்லாத வணிகர்களுக்கும் கியூஆர் கோடு உருவாக்கி கொடுத்து வருகிறார்கள். இதனால் . ஒரு வியாபாரி அவர் எந்த வங்கியில் கணக்கு வைத்து இருந் தாலும், அவரின் வங்கி கணக்கு எண் மற்றும் ஐஎப்எஸ்சி கோடு ஆகியவற்றை இந்தியன் வங்கியில் கொடுத்தால் சில நிமிடங்களில் அவர்களுக்கு கியூஆர் கோடு கொடுத்து விடுவார்கள்.

நாம் இந்தியன் வங்கி கஸ்டமராக இருந்தால் போதும் . , கியூ ஆர் கோடு உள்ள கடையில், 50 ரூபாய்க்கு காய்கறிகளை வாங்கி விட்டுநம்முடைய ஸ்மார்ட் போனில் இன்ட்பே ஆப்பை லைட்டாக டச் செய்து ஸ்கேன் அன்டு பே என்ற வசதியை தட்டி ஸ்கேன் செய்து4 டிஜிட் பாஸ்வோர்டைபோட்டால் போதும் அந்த வியாபாரியின் கணக்கில் 50 ரூபாய் ஏறி விடும்.

பணம் கிரடிட் ஆகி விட்டது என்கிற எஸ்எம்எஸ் வாங்கி யவர் விற்பவர் என இரண்டு பேரின் மொபைலுக்கும் சென்றுவிடும். . இதை ஸ்கேன் அன்டு பே சேவை என்கிறார்கள்தற்போது நிலவும் சில்லறை பிரச்சினை யால், அந்த ஆப்பை தினமும் புதிதாக சுமார் 200 பேர் பதிவிறக்கி வருகின்றனர்.ஆக மக்கள் மாற்றத்தை நோக்கி படிப்படியாக சென்றுகொண்டு இருக்கிறார்கள் என்பது மட்டும் தெரிகிறது
.
இது தாங்க ஆரம்பம் இது படிப்படியாக ஆயிரக்கணக்கில் உயர்ந்து லட்சகணக்கில் எழுந்து கோடிக்கணக்கில் வந்து
நிற்கும்.பிறகென்ன மக்கள் பொருள் வாங்க விற்க வங்கிகளின் வழியே தான் நடக்கும்.வங்கிகளில் பணம்
நிறைய அளவில் சேமிப்பாக இருக்கும்.வங்கிகளும் என்னை மாதிரி இல்லாதவர்களை கூப்பிட்டு தம்பி..
இங்க வாங்க ஒரு அஞ்சு லட்சம் லோன் தருகிறேன் வாங்கி ஏதாவது தொழில் செய்து பிழைத்து கொள்ளுங்கள்
என்று என்னை மாதிரி ஆட்களின் வாழ்வில் ஒளிஏற்று வார்கள்.

நான் செய்தவைகளை சரியென்று எப்பொழுதும் நியா யப்படுத்தி சொல்ல மாட்டேன்,ஆனால்அவையாவும்
நாட்டின் முன்னேற்றத்திற்காக மட்டுமே செய்தேன் என்று என்று சிங்கப்பூரில் லீ குவான் யூ சொன்னது இந்தியாவில் உள்ள எனது காதுகளில் அடிக்கடி ஏன் எதிரொலிக்கிறது என்றால் இங்கேயும் ஒரு லீ இருக்கிறார் என்பதாலே..

Leave a Reply