சபரிமலை ஐயப்பன் கோவிலில் 10 முதல் 50 வயது வரை உள்ள பெண் களையும் அனுமதிக்க கோரி தொடுக்கப்பட்ட வழக்கில் அனைத்து வயது பெண்களுக்கும் அனுமதி அளித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு வெளியாகி உள்ளது. தலைமை நீதிபதி தீபக்மிஸ்ரா, நீதிபதிகள் நாரிமன், சந்திரசூட், கான்வில்கர், இந்து மல்ஹோத்ரா அமர்வு இந்ததீர்ப்பை வழங்கி உள்ளது.

சபரி மலை கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களுக்கும் அனுமதி அளித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. 5 நீதிபதிகளில் 4 பேர் ஒரேதீர்ப்பை வழங்கி உள்ளனர். இந்த அமர்வில் இடம்பெற்றுள்ள பெண் நீதிபதி இந்து மல்ஹோத்ரா மட்டும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினார்.

இந்த அமர்வில், 4 நீதிபதிகள் வழங்கியதீர்ப்பு: பல நூற்றாண்டுகளாக பெண்கள் பாரபட்சமாக நடத்தப்பட்டு வருகின்றனர். பெண்கள் எந்தவிதத்திலும் ஆண்களுக்கு குறைந்தவர்கள் அல்ல. பெண்கள் தங்கள் உரிமைகளுக்காக போராடவேண்டிய நிலை உள்ளது. பெண்களை கடவுளாக கவுரவிக்கும் நாட்டில் அவர்களை பலவீனமான வர்களாக கருதக்கூடாது. இன்னும் எத்தனை ஆண்டுகள்தான், பெண்கள் காத்திருக்க வேண்டும். மனிதர்களின் பக்தி என்பது, உடலியல் மற்றும் உளவியல் ரீதியாக தீர்மானிக்கக் கூடாது. வழிபாட்டு தளங்களில் பாகுபாடு காட்டக் கூடாது. பாலின அடிப்படையில், பொது இடங்களில் பொதுமக்கள் செல்ல தடைவிதிப்பது அரசியல் சாசனத்திற்கு விரோதமானது. சபரிமலையில், அனைத்துவயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என தீர்ப்புவழங்கினர்.

Leave a Reply