சபரிமலையில் போராட்டங்கள் தொடர்ந்தால் வரும்சீசனில் உயிரிழப்புகள் ஏற்பட வாய்ப்பு  இருப்பதாக, சிறப்புகாவல் ஆணையர் மனோஜ் உயர் நீதிமன்றத்தில் அறிக்கை அளித்துள்ளார்.  

ஐயப்பன் கோயிலின் நடை கடந்த புதன் கிழமை திறக்கப்பட்டது. கோயிலில் 50 வயதுக்கு உள்பட்ட பெண்களை அனுமதிப்பதற்கு எதிர்ப்புதெரிவித்து பக்தர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதையும் மீறி வந்த பத்திரிகையாளர், சமூக ஆர்வலர் என சில பெண்களை, பக்தர்கள் பாதிவழியில் தடுத்து நிறுத்தினர். பின்னர், அவர்களை போலீஸார் பத்திரமாக திருப்பி அனுப்பிவைத்தனர். பத்திரிகையாளர்கள் தாக்கப்பட்ட சம்பவமும், போராட்டக்காரர்கள் மீது போலீசார் தடியடி நடத்திய சம்பவங்களும் நடந்தது. 

சபரிமலையில் நடந்த விஷ்யங்கள் தொடர்பாக விரிவான அறிக்கைதருமாறு சிறப்பு காவல் ஆணையராக மனோஜ் என்ற அதிகாரி கேரள உயர்நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டார். 

இந்நிலையில் சபரிமலையில் போராட்டங்கள் தொடர்ந்தால் வரும் சீசனில் உயிரிழப்புகள் ஏற்பட வாய்ப்பு  இருப்பதாக, சிறப்புகாவல் ஆணையர் மனோஜ் உயர்நீதிமன்றத்தில் அறிக்கை அளித்துள்ளார்.  

இதுதொடர்பாக அவர் செவ்வாயன்று உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

சபரிமலையில் நடந்த போராட்டங்கள் அடுத்தமாதம் துவங்க உள்ள சீசனிலும் தொடர்ந்தால் உயிரிழப்புகள் ஏற்பட அதிகவாய்ப்பு உண்டு. 

போராட்டத்தில் ஈடுபட அதிக அளவில் குவியும் பக்கதர்களின் காரணமாக ஏற்படும் நெரிசல் உள்ளிட்ட சம்பவங்களால் அநேகம்பேர் உயிரிழப்பார்கள். 

தற்போது அங்கு ஒரு அசாதாரணமான சூழல் நிலவிவருகிறது.இவ்வாறு அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.  

Leave a Reply