மக்கள் வரி பணத்தில் பசுமாட்டுக்கு பல ஆயிரம் கோடிகளை செலவழிக்கிறது என்று பாஜகவினர் எதிர்க்கட்சியினர் குற்றம்சுமத்திவரும் நிலையில், காங்கிரஸ் அரசு, பசு பாதுகாப்பிற்காக 3 ஆண்டுகளில் 1,500 கோடி ரூபாய் செலவுசெய்திருக்கிறது.

ராஜஸ்தான் மாநிலத்தில் பசுக்களின் பாதுகாப்பிற்காக 1,511,31 கோடியை செலவிட்டதாக அம்மாநில அமைச்சர் சாந்தி தரிவால் இதை தெரிவித்துள்ளார். முத்திரைவரி மற்றும் மதுபான விற்பனைக்கு செலுத்தவேண்டிய வாட்’டிலிருந்து சேகரிக்கப்பட்ட நிதியை மாடுகளின் பாதுகாப்பிற்காக செலவிட்டுள்ளதாக தகவல்.

சட்டசபையில் கேள்விநேரத்தில் பாஜக உறுப்பினர் தரம் நாராயண் ஜோஷியின் துணைகேள்விக்கு பதிலளித்தபோது தரிவால் இந்தபதிலை அளித்திருக்கிறார்.

மாடுகளை வைத்து அரசியல் செய்து வருகிறது பாஜக என்று சொல்லப்பட்டுவரும் நிலையில், ராஜஸ்தான் காங்கிரஸ் அரசு மாடுகளுக்கு 1500 கோடி ரூபாயினை செலவளித்துள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்திஇருக்கிறது.

Tags:


Comments are closed.