கேள்விக்கு பதில் அளிக்கவேண்டிய நேரத்தில், சபைக்குவராத, மத்திய, கால்நடைத்துறை இணை அமைச்சர், சஞ்சீவ்குமார் பல்யானை, ராஜ்ய சபா தலைவர் வெங்கையா நாயுடு, கண்டித்தார்.

ராஜ்ய சபாவில் நேற்று, கேள்வி நேரம் முடிந்தபின், கால்நடைத்துறை தொடர்பான பிரச்னையை, உறுப்பினர் ஒருவர் எழுப்பினார். அதற்கு பதிலளிக்க வேண்டிய, மத்திய கால்நடைத்துறை, மீன்வளத்துறை இணை அமைச்சரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான, சஞ்சீவ் குமார் பல்யான், சபையில் இல்லை.இதனால், சபை அலுவல்களை நடத்திக் கொண்டிருந்த, ராஜ்யசபா தலைவரும், துணை ஜனாதிபதியுமான, வெங்கையா நாயுடு, கடும்கோபம் அடைந்தார். அமைச்சர் சஞ்சீவ் குமாரை அழைத்து வரும்படி, சபை காவலர்களுக்கு உத்தரவிட்டார்.

 

Comments are closed.