மக்களின் பிரச்னைகளை தீர்க்கமுடியாத சமாஜ்வாதி அரசுக்கு, தொடர்ந்து ஆட்சியில் நீடிக்கும்தகுதி இல்லை என்று உத்தர பிரதேசத்தை ஆளும் சமாஜவாதி கட்சியை மறை முகமாக தாக்கிப் பேசினார் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் முதல்வர் அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சி ஆட்சியில் உள்ளது. இந்நிலையில், உத்தர பிரதேச தலைநகர் லக்னொவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசும்போது, ''அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசின்பங்காக வழங்கப்பட்டு வந்த நிதியை 32 சதவீதத்திலிருந்து 42 சதவீதமாக பிரதமர் நரேந்திரமோடி உயர்த்தி உள்ளார்.

இந்த மாநிலத்தில் நிதிப் பற்றாக்குறை இருப்பதாகக் கூறுவது தவறானதாகும். நானும் உத்தரப் பிரதேச மாநில முதல்வராகப் பதவி வகித்திருக்கிறேன். இந்த மாநிலத்தின் அரசு கரூவூலம் குபேரனிடம் இருக்கும் நிதியைப் போன்றது என்பது எனக்கு தெரியும்.

மாநிலத்தில் நிதிப் பற்றாக்குறை இருப்பதாகக் கூறி, மக்களை முட்டாள்களாக்க ஆளுங்கட்சியினர் முயற்சிக்கின்றனர். மேலும், மக்களின் பிரச்னையைத் தீர்க்க முடியாத ஒரு மாநில அரசுக்கு (உத்தரப் பிரதேசம்) தார்மிக அடிப்படையில் தொடர்ந்து அதிகாரத்தில் இருக்கும் தகுதி இல்லை" என்றார்.

Leave a Reply