பாஜக. உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் உறுப்பினர்களிடம் நான்சொல்வது, நீங்கள் ஒரு சமுதாயத்தினருக்கு எதிராகபேசினால் நாட்டிற்கு பதில்சொல்ல வேண்டும்.

தலித்கள், பழங்குடியினர் மற்றும் ஒடுக்கப்பட்டவர்களின் முன்னேற்றத்தில் ஆர்வமுடையவன் நான். முந்தைய அரசைவிட தலித்கள் மீதான வன்முறை சம்பவங்கள் குறைந்துள்ளது. 10 அரசு மற்றும் 10 தனியார் பல்கலை கழகங்கள் பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக் குழுவின் விதிமுறையில் இருந்து விடுவிக்கப் பட்டுள்ளது. அந்த பல்கலைக் கழகங்களை உலகத் தரத்திற்கு உருவாக்க திட்டமிட்டுள்ளது அரசு.

வெளிநாடுகளில் கருப்புபணம் பதுக்கி வைப்பதற்கு எதிராக நம்மிடம் மிகவும் வலிமையான சட்டங்கள் உள்ளன. சாதாரண மனிதர்களுக்கு வாழ்க்கையை எளிமை யாக்குவதில் அதிக கவனம் செலுத்தப்படும். சீர்திருத்தம், செயல்பாடு, வெளிப்படைத்தன்மை ஆகியவையே எனது அரசின் தாரக மந்திரம்.

நான் ஒருமாநிலத்தின் முதல்–மந்திரியாக 14 ஆண்டுகள் இருந்துள்ளேன். அரசியல் காரணங்களுக்காக, நான் எந்தகோப்புகளையும் கையாண்டது இல்லை. அத்தகைய குற்றச்சாட்டு என் மீது எழுந்தது இல்லை. இதற்கு வரலாறு சாட்சியாகஉள்ளது.

மத்திய அரசில் இரண்டரை ஆண்டுகளாக இருக்கிறேன். எந்தமாநிலத்திலும் யாருக்கு எதிரான கோப்புகளையும் மீண்டும் திறக்குமாறு எனது அரசு உத்தரவிட்டது இல்லை.எந்த அரசியல் கட்சிக்கோ, அரசியல் பரம்பரைக்கோ எதிராக எனது அரசு உத்தரவிட வில்லை.

எனவே, எந்த பரம்பரையையும் தப்பவிடாமல் பழிவாங்குகிறோம் என்று கூறுவது சரியல்ல. அதுபோல், எந்த விவகாரத்தையும் மூடிமறைக்க சொல்வதற்கும் எனக்கு உரிமை இல்லை. சட்டம் தனது கடமையை செய்யும்.

என் மீது அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளை கூறிவருகிறார்கள். சாதியின் பெயரால் நாட்டை விஷமாக்கி விட்டவர்கள், சமூக பிரச்சினைகளுக்கு அரசியல்சாயம் பூசுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும்.  

வளர்ச்சி ஒன்றே நமது செயல் திட்டமாக இருக்க வேண்டும். வறுமையில் இருந்து நாடு விடுபட வேண்டுமென்றால், வளர்ச்சி அவசியம். அதற்கு ஏழைகளுக்கு நாம் அதிகாரம் அளிக்கவேண்டும். பிரதமர் நரேந்திர மோடி நேற்று ஒரு ஆங்கில செய்தி சேனலுக்கு அளித்த பேட்டி .

 

Leave a Reply