சமூக மற்றும் கல்வியில் பின் தங்கிய வகுப்பினருக்கான தேசியஆணையம் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

 

பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் நேற்று மத்திய அமைச்சரவை கூடியது.  இதில், சமூக மற்றும் கல்வியில் பின் தங்கிய வகுப்பினருக்கான தேசிய ஆணையம் என்ற புதியஆணையம் ஒன்றை அமைப்பதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.  அதற்கேற்றபடி, அரசியல மைப்பில் திருத்தம்செய்து பிரிவு 338பி சேர்ப்பதற்கும் ஒப்புதல் வழங்கப்பட்டது.

இந்த ஆணையத்திற்கு அரசியலமைப்பு அந்தஸ்து வழங்குவதற்கான மசோதா நாடாளுமன்றத்தில் அறிமுகப் படுத்தப்படும்.  இந்த ஆணையம் ஒரு தலைவர், ஒருதுணை தலைவர் மற்றும் 3 உறுப்பினர்கள் ஆகியோரை கொண்டிருக்கும்.

பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான தேசியஆணையம் 1993 சட்டத்தினை வாபஸ் பெற்றுள்ள அமைச்சரவை, அச்சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட அந்த ஆணையத் தினையும் கலைத்துவிட்டது.  தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினரின் புகார்களை கவனிப்பதற்காக தேசியஆணையம் உள்ளது.

இதேபோன்று, பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் குறைகளை கேட்பதற்காக, பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான தேசிய ஆணையத்தினை அனுமதிக்க, அதற்கு அரசியலமைப்பு அந்தஸ்து வழங்கவேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.  இதனைதொடர்ந்து இம்முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.

சமூக நீதி மற்றும் அதிகார அமைச்சகத்தின்கீழ் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான தேசிய ஆணையம் என்ற சட்டரீதியான அமைப்பு இருந்துவந்தது.  இதற்கான சட்டம் கடந்த 1993ம் ஆண்டு ஏப்ரல் 2ல் அமலுக்கு வந்தது.

 

Leave a Reply