சமூக வலை தளங்களில் அவதூறு கருத்துக்களை பரப்பவேண்டாம் என்று மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
இதுகுறித்து மத்திய செய்தி ஒலிபரப்புத்துறை அமைச்சர் ராஜ்யவர்த்தன்சிங் ராத்தோர் கூறியதாவது:
நீங்கள் இந்தநாட்டின் படை வீரனாக இருப்பதற்கு ராணுவச்சீருடை அணியவேண்டிய அவசியமில்லை. தற்போது எல்லைப்பகுதிக்கும் செல்ல வேண்டியதில்லை. ஏனெனில், எதிரி உங்கள் வீட்டிலேயே சமூகவலைதளங்கள் மூலம் தாக்குதலை நடத்தமுடியும். எனவே மக்கள் அனைவரும் விழிப்புடன் இருக்கவேண்டும்.
எதிரிகளால் அவ்வாறு சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்யப்படும் நம் நாட்டுக்கு எதிரான அவதூறான கருத்துகளையோ, உங்களுக்கு தெரியாத விஷயங்களையோ நீங்கள் பரப்பக்கூடாது. இத்தகைய தகவல்களைத் தடுத்து நிறுத்துவதன் மூலம் நீங்கள் உண்மையான படை வீரனாக விளங்க முடியும் என்று தெரிவித்தார்.