விலைஉயர்வை தடுக்க சர்க்கரை ஆலைகள் மற்றும் கொள்முதல் நிலையங்களில் சர்க்கரையின் இருப்புக்கு மாநில அரசுகள் வரம்புநிர்ணயிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 

பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் நேற்று நடைபெற்ற மத்திய அமைச் சரவை கூட்டத்தில் இம்முடிவு மேற்கொள்ளப்பட்டது. சர்க்கரையின் உற்பத்தி அதிகரித்துள்ள போதிலும் சில்லறை மற்றும் மொத்தவிற்பனையில் விலை அதிகரித்து வருவதை கருத்தில்கொண்டு மத்திய அரசு இந்த முடிவை  எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. 

இதன்மூலம், சர்க்கரையின் இருப்புக்கு வரம்பு நிர்ணயிக்கவும், பதுக் கல்களை தடுக்கவும் மாநில அரசுகளுக்கு அதிகாரம் அளிக்கப்படும். இந்த நடடிவக்கை மூலம் சர்க்கரை விலை உயர்வை தடுக்கமுடியும் என மத்திய அரசு கருதுவதாக கூறப்படுகிறது.

Leave a Reply