இந்திய ராணுவத்தின் சர்ஜிக்கல் தாக்குதலால், பாகிஸ்தான் எல்லையில் பலதீவிரவாதிகள் கொல்லப் பட்டதையும், இன்னும் பல தீவிரவாதிகளை பாகிஸ்தான் ராணுவம் தயார்நிலையில் வைத்திருப்பதையும், குறிப்பிட்டு, பாகிஸ்தானின் மூத்தபோலீஸ் அதிகாரி ஒருவர், தொலை பேசியில் பேசிய பேச்சு கசிந்துள்ளது.
 
சிஎன்என்-நியூஸ்18 டிவி சேனலில், பாகிஸ்தானின் மிர்பூர்ரேஞ்ச், போலீஸ் எஸ்.பி, குலாம் அக்பர், தொலை பேசியில் பேசிய பேச்சு ரகசியமாக பதிவு செய்யப்பட்டு ஒளிபரப்பப் பட்டது. உயர் அதிகாரியிடம் பேசுவதாக நினைத்துக்கொண்டு, டிவி சேனலிடம் இந்தவிவரங்களை வெளியிட்டார் அந்த போலீஸ் எஸ்.பி. குலாம் அக்பர்
கூறிய அந்த பரபரப்பு தகவல்கள் இதுதாதான்:
 
சார்.., ராத்திரிநேரம் அது. சுமார் 3-4 மணி நேரங்கள் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அனேகமாக அதிகாலை 2 மணியி லிருந்து 4 அல்லது 5 மணி வரை அந்த தாக்குதல் தொடர்ந்துள்ளது. நமது ராணுவத்தை சேர்ந்த 5 வீரர்கள் அப்போது கொல்லப் பட்டுள்ளனர். ஆனால் நமது ராணுவத்திற்கு உடனே தெரியவில்லை. தகவல் தெரிந்ததும், ராணுவத்தினர் ஆம்புலன்ஸ்சுகளில் விரைந்துவந்து தீவிரவாதிகளின் உடலங்களை அங்கிருந்து உடனடியாக அப்புறப்படுத்திவிட்டனர். இவ்வாறு அக்பர் கூறினார்.
 

 

Leave a Reply