மத்திய அமைச்சரும் பாஜக.,வின் முதல்வர் வேட்பாளருமான சர்பானந்தா சோனோவால் அசாம்மாநிலம் மஜுலி தொகுதியில் வேட்புமனு தாக்கல்செய்தார். அசாம் மாநிலத்துக்கு ஏப்ரல் 4 மற்றும் 11 தேதிகளில் இரண்டுகட்டமாக தேர்தல் அறிவிக்கப் பட்டுள்ளது. மொத்தமுள்ள 126 தொகுதிகளில் 65 தொகுதிகளுக்கு 4 ம் தேதி  வாக்குப் பதிவு நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த வாரம் தொடங்கியது. வேட்புமனு தாக்கல் செய்ய நாளை கடைசி நாள். இதைதொடர்ந்து  ஏராளமானோர் வேட்பு மனுக்களை நேற்று தாக்கல்செய்தனர்.

பாஜக முதல்வர் வேட்பாளரும் மத்திய அமைச்சருமான சர்பானந்தா சோனோவால் மஜுலி தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார். வேட்புமனு தாக்கலுக்கு  பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், அசாமில் பாஜ ஆட்சி மலரும் என நம்பிக்கைதெரிவித்தார். காங்கிரஸ் தலைவரும் அசாம் முதல்வருமான தருண் கோகய்  இன்று திட்டபார் தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இரண்டுதொகுதிகளும் வரும் 4ம் தேதி வாக்குப்பதிவை சந்திக்க  இருக்கின்றன.
 

Leave a Reply