சர்வதேச அமைப்புகளிடமிருந்து பெறும்நிதியை பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக செலவுசெய்வதாக இந்தியா குற்றம்சாட்டியுள்ளது.

இது தொடர்பாக ஐ.நா.,வில் இந்திய அதிகாரி ஏனாம் காம்பீர் தாக்கல்செய்த அறிக்கையில், சர்வதேச அமைப்புகளிடம் கோடிக்கணக்கான டாலர் அளவுக்கு நிதியுதவி பெறும் பாகிஸ்தான், அவற்றில் பெரும்பாலானவற்றை பயங்கர வாதிகளுக்கு பயிற்சிஅளிக்கவும், நிதியுதவி மற்றும் ஆதரவு அளிக்கவுமே பயன் படுத்துகிறது. அவர்களை அண்டை நாடுகளில் வன்முறையை தூண்ட ஊக்கு விக்கிறது. உலகப் புகழ்பெற்ற பழமை வாய்ந்த டெக்சிலா கல்வி நிலையத்தை, தற்போது பயங்கரவாதிகளை உருவாக்க பயன் படுத்தப்படுகிறது. இங்கு சர்வதேச அளவிலான பயங்கரவாதிகளுக்கு பயிற்சி அளிக்கப் படுகிறது. இதனால் சர்வதேச அளவில் பல பிரச்னைகள் ஏற்படுகிறது. பாக்கின்., ஆதரவுடன் பயங்கரவாதிகள் வெளிப்படையாக பணம் சேகரிக்கின்றனர். இதன்மூலம் சர்வதேச விதிகளை பாகிஸ்தான் மீறுகிறது.

பயங்கரவாதத்திற்கு ஆதரவு அளிக்கும் பாகிஸ்தானால், இந்தியா மற்றும் அதன் அண்டைநாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. உலகின் மிகப் பெரிய மனித உரிமை மீறல் பயங்கரவாதமே ஆகும். இதனை கொள்கையாக பயன்படுத்துவது போர்க்குற்றமாக கருதப்படவேண்டும். பாகிஸ்தானில் மசூத்அசார், ரெஹ்மான் லக்வி ஆகியோர் சுதந்திரமாக உலாவுகின்றனர். வெளிப்படையாக பயங்கரவாதத்தை தூண்டுகின்றனர் எனக்கூறினார்.

Leave a Reply