இந்திய சுற்றுலாத்துறை சர்வதேச தரப்பட்டியலில் 52 வது இடத்தில் 40வது இடத்துக்கு முன்னேறி யிருப்பதற்கு பிரதமர் மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக டிவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ள அவர், உலக பொருளாதார நிறுவனம் சுற்றுலா தொடர்பாக வெளியிட்டுள்ள தரவரிசைப் பட்டியலில், கடந்த 2013ம் ஆண்டு 65வது இடத்தில் இருந்ததையும், 2015ம் ஆண்டு அது 52வது இடத்துக்கு முன்னேறி யதையும் சுட்டிக்காட்டியுள்ளார். 

தற்போது மேலும் முன்னேறி, 2016ம் ஆண்டின் தரவரிசையில், 40 வது இடம் இந்தியாவுக்கு கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார். சுற்றுலாத் துறைக்கு மத்திய அரசு அளிக்கும் முக்கியத்துவத்தை இது உணர்த்துவதாகக் குறிப்பிட்டுள்ள பிரதமர், சுற்றுலாத் துறைக்கு இது ஊக்கமளிக்கும் செய்தி எனவும் தெரிவித்துள்ளார். 

சர்வதேச சுற்றுலா தரப்பட்டியலில் ஸ்பெயின் முதலிடத்தில் உள்ளது. சுற்றுலா தர வரிசைப்பட்டியலில், ஜப்பான் 4வது இடத்திலும், சீனா 13வது இடத்திலும் உள்ளன.

Leave a Reply