தடை செய்யப்பட்ட ஜெய்ஷ் – இ – முகமது பயங்கரவாத தலைவர் மசூத் அசார்  இந்தியாவில் பயங்கரவாதிகள் நடத்திய பல்வேறுதாக்குதல்களில் மூளையாகச் செயல்பட்டது விசாரணையில் தெரிய வந்தது. 2019 ஆம் ஆண்டு தொடக்கத்தில் ஜம்மு – காஷ்மீரின் புல்வாமாவில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 சி.ஆர்.பி.எஃப் ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இந்ததாக்குதல் பின்னணியிலும் மசூத் அசார் மூளையாக செயல்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து இந்தியாவின் வலியுறுத்தலின் பேரில் மசூத் அசாரை ஐ.நா அமைப்பு சர்வதேச பயங்கரவாதியாக அறிவித்தது.

இதனைத் தொடர்ந்து சர்வதேச நாடுகளின் நெருக்கடியால் பாகிஸ்தான் பயங்கரவாதி மசூத்அசாரை கைதுசெய்து சிறையில் அடைத்தது. தற்போது மசூத் அசார் பாகிஸ்தானின் போலீஸ் காவலில் இல்லை என்பதும் பாகிஸ்தான் அரசு மசூத்அசாரை விடுதலை செய்திருப்பதும் தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக மத்திய அரசு அதிகாரிகள் தெரிவிக்கையில், சர்வதேச பயங்கரவாதி மசூத் அசார் சிறையில் இருப்பதாக பாக்கிஸ்தான் சொல்வதுபொய். மசூத் அசார் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள பவல்பூரில் உள்ள ஜெய்ஷ் – இ – முகமது அமைப்பின் தலைமையகத்தில் உள்ள ஆடம்பரபங்களாவில்  சொகுசாக இருப்பதாகவும் பயங்கரவாதிகளை காஷ்மீருக்குள் ஊடுருவசெய்யவும் தாக்குதல் நடத்த ஆலோசித்து வருவதாகவும் புலனாய்வு தகவல் தெரிவிப்பதாக கூறுகின்றனர்.

Comments are closed.