தமிழகத்தில் சர்வாதிகார ஆட்சியின் அடக்குமுறை. கோவை ஹிந்து முன்னணித் தொண்டர் சசிகுமார் அவர்களின் படுகொலையைக் கண்டித்து சென்னை மற்றும் தமிழகத்தின் பல இடங்களில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திட பாரதீய ஜனதா கட்சி அறிவித் திருந்தது. அதன்படி சென்னையில வள்ளுவர் கோட்டத் தில் ஆர்ப்பாட்டம் நடத்திட அனுமதி கேட்டது. ஆனால் பயங்கரவாதிகளை பாதுகாக்கும் தமிழக காவல்துறை அதற்கு அனுமதி மறுத்தது.

சைதாப்பேட்டையில் பனகல் மாளிகை முன்பு அனுமதி கேட்டது அதற்கும் காவல் துறை அனுமதிக்கவில்லை. இறுதியில் எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் ஆர்ப்பாட்டம் நடத்திட அனுமதித்த காவல்துறையினர் இன்று காலையில் அனுமதி இல்லை என அறிவித்து நூற்றுக்கணக்கான காவல்துறையினரை அங்கு குவித்திருந்தது.

அங்கு மைக் வைத்துப் பேசுவதற்காக கொண்டுவரப்பட்ட ஒலிபெருக்கிக் கருவிகளை வேனில் இருந்து இறக்கவே விடவில்லை. சாலையில் செல்பவர்கள் பார்வையில் பட்டுவிடாதபடி ஆர்ப்பாட்டம் செய்ய வந்தவர்களை சூழ்ந்து நின்று கொண்டனர் காவல் துறையினர்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்பவர்களைக் கைது செய்வதற்காக முன்னேற்பாடாக காவல்துறை வாகனங்கள், அரச பேருந்துகள் தயார்நிலையில் இருந்தன.

ஆர்ப்பாட்டக்காரர்கள் கோஷம் எழுப்புவதற்குக் கூட அமைதிக்காத காவல்துறை பாரதீய ஜனதா கட்சி தேசிய பொது செயலாளர் ஹெச்.ராஜா, மாநிலத் தலைவர் டாக்டர் தமிழிசை சௌந்தர்ராஜன், ஹிந்து முன்னணி மாநகர பொது செயலாளர் திரு.தி.இளங்கோ, உட்பட சுமார் 500 தொண்டர்கள் கைது கைதுசெய்தனர்.

குறிப்பு: கடந்த வாரம் ஆர்.எஸ்.எஸ்.அலுவலகத்தை முற்றுகை இட முயற்சி செய்த 10க்கும் மேற்பட்ட லெட்டர் பேட் இயக்கங்களுக்கு அனுமதி அளித்து அவர்கள் சாலையை மறித்து ஆர்ப்பாட்டம் செய்திட அனுமதி அளித்த காவல்துறை பா.ஜ.கட்சி.ஹிந்து முன்னணி போன்ற சட்டத்தை மதித்து நடக்கக்கூடிய இயக்கங்களுக்கு தொடர்ந்து அனுமதி அளிக்க மறுத்து வருவது வாடிக்கை ஆகிவிட்டது.

நன்றி சடகோபன் நாராயண்

Leave a Reply