என் தலைமை யிலான, தே.ஜ., கூட்டணி அரசு, இரண்டாவது முறையாக பொறுப்பேற்று, 100 நாட்கள் நிறைவடைந்துள்ள நிலையில், இந்த குறுகியகாலத்தில், சவால்களுக்கு சவால் விடும் திறமையை, நம் நாடு பெற்றுள்ளது என்பதை, இந்த உலகிற்கு உணர்த்தியுள்ளோம்,

என் தலைமையிலான, தே.ஜ., கூட்டணி அரசு, இரண்டாவது முறையாக பதவியேற்று, 100 நாட்கள் நிறைவடைந் துள்ளன. இந்த, 100 நாட்களில், பலசவால்களுக்கு சவால்விடும் திறமையையும், தகுதியையும், நம்நாடு பெற்றுள்ளது என்பதை, இந்த உலகிற்கு உணர்த்தி உள்ளோம். ஒருசவாலை, நேரடியாக எப்படி எதிர்கொள்வது என்பது, நமக்குதெரியும். ஜம்மு – காஷ்மீர் விவகாரத்திலும், தண்ணீர் பிரச்னையிலும், இது போன்ற சவால்களை சந்தித்துள்ளோம்.

தற்போது நாட்டில் உள்ள, 130 கோடி மக்களும், பிரச்னைகளுக்கு புதியதீர்வை காணத் துவங்கியுள்ளனர். ஜம்முகாஷ்மீர் மற்றும் லடாக்மக்களின் விருப்பங்களை நிறைவேற்ற, புதிய அணுகு முறையை கையாண்டுள்ளோம். கடந்த, 100 நாட்களில், வளர்ச்சி, நம்பிக்கை, பெரிய அளவிலான மாற்றம் ஆகியவற்றை நோக்கி, நம்நாடு பயணித்து உள்ளது. மக்களின் ஆதரவுடன், நாட்டின் பாதுகாப்பு மற்றும் விவசாயதுறை, பயங்கரவாத ஒழிப்பு, முஸ்லிம் சகோதரிகளின் உரிமையை மீட்பது போன்ற விஷயங்களில், மத்திய அரசு முக்கிய முடிவுகளை எடுத்துள்ளது; இதற்கான சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன.

இதற்காக, அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் நன்றி தெரிவிக்கிறேன். வங்கிதுறையிலும் முக்கியமான முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. இதற்கான பலன், எதிர்காலத்தில் கிடைக்கும்.

ஹரியானாவில்,  நேற்று நடந்த, பா.ஜ., கூட்டத்தில், தேர்தல் பிரசாரத்தை துவக்கி வைத்து, பிரதமர் மோடி பேசியது:

Comments are closed.