நாடாளுமன்றத் தேர்தலில் இரண்டுலட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் நிச்சயம் வெற்றிபெறுவேன் என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி பாஜக  வேட்பாளர் பொன்.ராதா கிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசியபோது, கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 50 ஆண்டுகளில் செய்யவேண்டியதை, தேசிய ஜனநாயக கூட்டணி அரசு 5 ஆண்டுகளில் செய்துமுடித்துள்ள சாதனைகளை கூறி நாங்கள் வாக்குகேட்போம் என கூறினார்.

மேலும், கன்னியாகுமரியில் சுமார் இரண்டு லட்சம்வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவது நிச்சயம் எனவும், பாரதிய ஜனதாவின் தேர்தல் அறிக்கை விரைவில் வெளியிடப்படும் எனவும் கூறினார். மக்களுக்கு வேலைக்காரனாக செயல்படும் என்னிடம் அவர்கள் அதிகாமாக எதிர்பார்க்கிறார்கள். மக்களின் எதிர்பார்ப்பை நிச்சயம் செய்வேன் எனவும் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

Leave a Reply