பாக்யோங்கில் திறக்கப்பட்டுள்ள இந்தவிமான நிலையத்தையும் சேர்த்து, நாட்டில் தற்போது 100 விமான நிலையங்கள் உள்ளன. சாதாரண காலணிகளை அணிந் திருக்கும் நபர்களும், விமான நிலையத்தில் பயணிக்கும் நிலையை உருவாக்குவதற்கு அரசு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.

நாடு சுதந்திரமடைந்த காலத்தில் இருந்து கடந்த 2014ஆம் ஆண்டு வரையிலும் 65 விமான நிலையங்கள் மட்டுமே இருந்தன. ஆனால் கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் நாங்கள் 35 விமான நிலையங்களை புதிதாக கட்டியுள்ளோம். இதற்கு முன்பு ஆண்டுக்கு சராசரியாக ஒருவிமான நிலையம் மட்டுமே கட்டப்பட்டது. அந்த எண்ணிக்கை தற்போது 9ஆக அதிகரித்துள்ளது.


இதேபோல், நமது நாட்டில் கடந்த 70 ஆண்டுகளில் 400 விமானங்கள் மட்டுமே இருந்தன. ஆனால், ஒரேயாண்டில் மட்டும் தற்போது பல்வேறுவிமான நிறுவனங்கள் புதிதாக 1,000 விமானங்கள் வாங்குவதற்கான உத்தரவுகளை பிறப்பித்துள்ளன.உடான் திட்டத்தின்கீழ் விமான பயணிகளுக்கான கட்டணம் ரூ.2,500க்கும் குறைவாக இருக்கின்றன. இதனால் சமூகத்தில் அனைத்து பிரிவுமக்களாலும் விமான நிலையங்களை பயன்படுத்த முடியும்.

வடகிழக்கு பிராந்தியத்தை இந்தியாவின் வளர்ச்சி தொடர்பான கதையின் என்ஜினாக உருவாக்க மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது. சுதந்திரத்துக்கு பிறகு, முதன்முறையாக வட கிழக்கு பிராந்தியத்தில் உள்ள பின்தங்கிய பகுதிகளில் வான் மற்றும் ரயில் தொடர்புகளை அதிகரிப்பதற்கும், அப்பகுதிகளில் மின்சார வசதியைசெய்து கொடுப்பதற்கும், உள்கட்டமைப்பு வசதியை செய்து தருவதற்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. வடகிழக்கு பிராந்தியத்தில் இருக்கும் பல்வேறு மாநிலங்களில் தற்போதுதான் முதன் முறையாக, மின்சார வசதி, நெடுஞ்சாலை பணிகள், உள்கட்டுமானம் உள்ளிட்ட பணிகள் நடக்கின்றன. வளர்ச்சி பணிகளை முடுக்கி விடுவதற்கு வடகிழக்கு பிராந்தியத்துக்கு நான் பல முறை வந்துள்ளேன். இதேபோல், மத்திய அமைச்சர்களும் பலமுறை வந்துள்ளனர்.


பாக்யோங்கில் இருக்கும் கிரின்பீல்ட் விமான நிலையத்தால் சிக்கிமில் போக்குவரத்து வசதி மேம்படுவதுடன், சுற்றுலா மற்றும் பிறபொருளாதார நடவடிக்கைகள் அதிகரிக்கும். வரும் அக்டோபர் மாதம் 4ஆம் தேதி முதல் விமான நிலையம் செயல்படத் தொடங்கியதும், இங்குவரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை பலமடங்கு அதிகரிக்கும். இதனால் இப்பிராந்தியத்தில் இருக்கும் இளைஞர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். புதிதாக ஹோட்டல்கள், தங்கும்விடுதிகள், கேளிக்கை விடுதிகள் இங்கு உருவாகும். பாக்யோங்கில் இருந்து கொல்கத்தா, குவாஹாட்டி ஆகிய இடங்களுக்கு விமானங்கள் விடப்படும். இதனால் பாக்யோங் பகுதிக்கும் நாட்டின் பிறபகுதிகளுக்கும் தொடர்பு ஏற்படும். மலைப் பகுதியால் சூழப்பட்டுள்ள சிக்கிம் மாநிலம், போக்குவரத்து ரீதியாக பலபிரச்னைகளை எதிர்கொண்டு வருகிறது. இந்த விமான நிலையத்தால், இனி போக்கு வரத்துக்கான நேரம் மிச்சப்படும். சிக்கிம் மாநிலத்தை ரயில்மூலம் இணைக்கும் பணிகளும் நடைபெறுகிறது .

சீன எல்லை அருகே சிக்கிம் மாநிலத்தில் புதிதாக கட்டப் பட்டுள்ள கிரின்பீல்ட் விமான நிலையத்தை பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை நாட்டுக்கு அர்ப்பணித்து பேசியது

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.